3 ஆக., 2010

காமரூனின் முப்பாட்டன் இந்திய சுதந்திரப் போராளிகளை கொன்றொழித்ததாக தகவல்

லண்டன்,ஆக3:பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் காமரூனின் முப்பாட்டன் இந்தியாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக்கைக் கொண்டு 1857 ஆம் ஆண்டு முதல் சுதந்திர போராட்டத்தின் வேளையில் அதனை அடக்கி ஒடுக்குவதற்கு ஒத்துழைத்ததாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தனது வாளை பயன்படுத்தி இந்திய சுதந்திர போராளிகளை கொன்றொழித்த போட்டோவை காமரூனின் முப்பாட்டன் வில்லியம் லா அளித்திருந்தார் என அப்பத்திரிகை கூறுகிறது.

1857 ஆம் ஆண்டு இந்தியாவை ஆக்கிரமித்த பிரிட்டீஷாருக்கு எதிராக போராடிய போராளிகளை கூட்டத்தோடு தூக்கிலிடும் சம்பவத்தில் காமரூன் முப்பாட்டன் வில்லியம் லா பங்கேற்றுள்ளார்.

கிளர்ச்சியை அடக்கி ஒடுக்க தனது ஒரு காதும்,கையும் இழக்கும்வரை வில்லியம் பணியாற்றியதாக அவரே தெரிவித்துள்ளார் என அப்பத்திரிகை கூறுகிறது.

அதேவேளையில் இதனைக் குறித்து கருத்துக்கூற காமரூனின் அலுவலகம் மறுத்துவிட்டது. தனது முன்னோர்கள் இந்தியாவில் ‘சாம்ராஜ்ஜிய நிர்மாணம் நடத்தினார்கள்’ என காமரூன் முன்பு குறிப்பிட்டிருந்தார்.

வல்லுநர் நிக் பாரட்தான் காமரூனின் குடும்ப பரம்பரையை கண்டறிந்தவர். "நீங்கள் யாரென்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்" என்ற பி.பி.சி நிகழ்ச்சியை நடத்துபவர்தான் நிக்.

ஒரு தயதாட்சணியமுமில்லாமல் எவ்வாறு தான் இந்திய சுதந்திரப் போராளிகளை வெட்டிக் கொன்றேன் என்று வில்லியம் லா கூறியதை பிரிட்டீஷ் நூலகத்திலிருந்து கண்டெடுத்த கடிதங்களை ஆதாரமாகக் கொண்டு சண்டே டைம்ஸும் செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் சுதந்திரப்போர் என்று சிறப்பித்துக் கூறப்படும் 1857 ஆம் ஆண்டு பிரிட்டீஷாருக்கு எதிராக நடந்த கிளர்ச்சியின் பொழுது நூற்றுக்கணக்கான போராளிகளை கைதுச் செய்து தூக்கிலேற்றியதை வில்லியம் லா தனது தந்தை ஜாண் லாவிற்கு எழுதியுள்ள கடிதத்திலும் விவரிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காமரூனின் முப்பாட்டன் இந்திய சுதந்திரப் போராளிகளை கொன்றொழித்ததாக தகவல்"

கருத்துரையிடுக