3 ஆக., 2010

குர்ஆனை எரிக்கும் திட்டத்திற்கெதிராக அமெரிக்க முஸ்லிம்கள்

வாஷிங்டன்,ஆக3:உலக வர்த்தக நிறுவனமும், பெண்டகனும் தாக்கப்பட்ட செப்டம்பர் 11 ஆம் தேதி புனித திருக்குர்ஆனின் பிரதிகளை தீவைத்துக் கொழுத்துவதற்கு ஃப்ளோரிடாவிலிலுள்ள கிறிஸ்தவ சர்ச் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க முஸ்லிம்கள் களமிறங்கியுள்ளனர்.

கிறிஸ்தவ சர்ச்சின் மோசமான திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குர்ஆனின் நற்செய்தியை பெரும்பாலான மக்களுக்கு கொண்டுசெல்ல அமெரிக்க இஸ்லாமிக் ரிலேசன்ஸ்(Cair) அமெரிக்க முஸ்லிம்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.

ரமலான் வருவதைத் தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சிகளை ஏற்பாடுச் செய்து அங்கு முஸ்லிமல்லாதவர்களுக்கு அல்குர்ஆனின் பிரதிகளை அன்பளிப்பாக அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் சட்ட வல்லுநர்கள்,பத்திரிகையாளர்கள்,அண்டை-அயலார் ஆகியோருக்கு குர்ஆனின் செய்தியை கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

"இஸ்லாம் பீதி" பரப்ப முயலும் திட்டத்திற்கெதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தில் அனைத்து நபர்களும் ஒத்துழைப்பார்கள் என கெய்ரின் தேசிய தகவல் தொடர்பு இயக்குநர் இப்ராஹீம் கூப்பர் தெரிவிக்கிறார்.

கெய்ன்ஸ் விலேயில் 'தி டோவ் வேர்ல்ட் அவ்ட்ரீச் செண்டர்' தான் செப்டம்பர் 11 ஆம் தேதி குர்ஆனின் பிரதிகளை எரிப்பதற்கு அழைப்புவிடுத்திருந்தது.

இஸ்லாம் ஷைத்தானின் செய்தி என்று ஃப்ளோரிடா சர்ச்சின் பாதிரி டெரி ஜான்சன் என்பவனின் கருத்து. சர்ச்சின் அழைப்பை வாபஸ் பெறவேண்டும் என நேசனல் அசோசியேசன் ஃபார் இவான்ஞ்சலிக்கல்ஸ் (N.A.E) கோரியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குர்ஆனை எரிக்கும் திட்டத்திற்கெதிராக அமெரிக்க முஸ்லிம்கள்"

கருத்துரையிடுக