3 ஆக., 2010

அமித்ஷாவை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை

அஹமதாபாத்,ஆக3:கடந்த 2005ம் ஆண்டு சொஹ்ராபுதீன் ஷேக்கை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள குஜராத் முன்னால் அமைச்சர் அமித்ஷாவை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ கோரியுள்ளது.

சிபிஐயின் காவலில் வைத்து விசாரிக்க கோரும் மனு, ஷாவின் ஜாமீன் மனு இரண்டும் இன்று நீதிமன்றத்திற்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஷாமீது கொலை,ஆள்கடத்தல் மற்றும் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்த சதி செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக கடந்த 23ஆம் தேதியன்று 30,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிஐ சமர்ப்பித்தது.

ஜூலை 25ஆம் தேதி சரணடைந்ததிலிருந்து ஷா நீதிமன்ற காவலில்தான் வைக்கப்பட்டிருக்கிறார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமித்ஷாவை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை"

கருத்துரையிடுக