15 ஆக., 2010

கேரளா:வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட நூலை ’மதத்துவேசம்’ பரப்பும் நூல் என பரப்புரை

கொச்சி,ஆக15:கேரள மாநிலம் ஆலுவா என்ற இடத்தில் ஆறு பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை கைதுச் செய்தனர். இந்த கைதிற்கு அவர்கள் கொடுத்த விளக்கம் விசித்திரமானதாகும். மதத்துவேசத்தை பரப்பும் நூலை கைவசம் வைத்திருந்ததாகவும், அதனை பிரசுரித்ததாகவும் காரணம் போலீசார் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்துள்ளனர்.

சுகுமாரன் என்ற பெயர் போலி என்றும்,அச்சிட்ட இடம் தெளிவில்லை எனவும் மாத்ருபூமி என்ற பத்திரிகை
கூறுகிறது.

கேரள கவ்முதி என்ற மலையாளப் பத்திரிகையின் ஸ்தாபக எடிட்டரான கே.சுகுமாரன் உள்ளிட்ட நான்கு பிரபல நபர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல்தான் ’அஸவர்ணருக்கு நல்லது இஸ்லாம்’ (தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம்).

சகோதரர் அய்யப்பன், பி.கெ.குஞ்சுராமன், எ.கே.பாஸ்கர் ஆகியோரின் கட்டுரைகளும் இதில் உட்படும். புத்தகத்தை மீண்டும் வெளியிட்ட கோழிக்கோடு ’நன்ம’ என்ற பதிப்பகத்தின் தெளிவான முகவரியும் புத்தகத்தில் உண்டு. பகுஜன் சாகித்ய அகாடமிதான் இதன் வெளியீட்டாளர்கள் என்ற தகவல் புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே உள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டம் நடத்துவதற்கு அனுமதியிருக்கவே ரகசியம் கூட்டம் நடத்தியபொழுது கைதுச்செய்யப்பட்டதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

முஸ்லிம் சமுதாயத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் ஒன்றான ’சிராஜ்’ என்ற பத்திரிகை மதுத்துவேசத்தை பற்றி எரியச் செய்யும் புத்தகங்கள் கூட்டம் நடத்திய இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதக்கலவரத்தைத் தூண்டும் வேண்டுமென்றே திட்டமிட்டே வெளியிட்ட புத்தகம்தான் இதன் உள்ளடக்கம் என்பது உறுதியானதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாகவும் அப்பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரபல பத்திரிகையாளர் பி.ஆர்.பி.பாஸ்கர் போலீசாரால் கைப்பற்றப்பட்ட புத்தகத்தில மதத்துவேசத்தைப் பரப்பும் கருத்துக்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கேரளா:வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட நூலை ’மதத்துவேசம்’ பரப்பும் நூல் என பரப்புரை"

கருத்துரையிடுக