இஸ்லாமாபாத்,ஆக15:பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காலரா நோய் பரவுகிறது.தெற்கு மாகாணத்திலும் நோய்க்கான பீதி நிலை நிற்பதாக ஐ.நா அதிகாரி தெரிவிக்கிறார்.
வெள்ளப்பெருக்கின் காரணமாக இரண்டு கோடி பேர் வீடு இழந்துள்ளதாக பாக்.பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி தெரிவிக்கிறார்.
சுதந்திர தின கொண்டாட்டத்தின் எல்லா நிகழ்ச்சிகளும் நேற்று ரத்துச் செய்யப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்களடங்கிய குழு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1600 க்கும் மேற்பட்டவர்கள் மரணித்த பகுதியில் காலரா பரவுவது மரண எண்ணிக்கையை அதிகரிக்கும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்வாத் பள்ளத்தாக்கில் முக்கிய நகரமான மின்கோராவில் காலரா
நோய் உறுதிச்செய்யப்பட்டுள்ளதாக ஐ.நாவின் செய்தித்தொடர்பாளர் மொரீஸியா கிலியானா தெரிவிக்கிறார்.
பிற இடங்களிலும் இந்நோய் பரவுவதாகவும், துயர்துடைப்பு பணியாளர்கள் இதனை பரிசோதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிந்து நதியில் நீர்மட்டம் அதிகரித்திருப்பது சிந்துமாகாணத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயமும், வேளாண்மையும் பல இடங்களிலும் நசிந்து போயுள்ளன. துயர்த்துடைப்பு பணிகள் நடந்துவருவதாக கிலானி தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார். இன்று அதிகாலையிலோ அல்லது நாளையோ அவர் பாகிஸ்தானுக்கு வருவார் என அவருடைய செய்தித்தொடர்பாளர் மார்ட்டின் நஸிர்கி தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பெருவெள்ளம்:பாகிஸ்தானில் காலரா பரவுகிறது"
கருத்துரையிடுக