11 ஆக., 2010

ஹரீரி கொலை:இஸ்ரேலின் பங்கிற்கு ஆதாரமுள்ளது - ஹஸன் நஸ்ருல்லாஹ்

பெய்ரூட்,ஆக11:லெபனானின் முன்னாள் பிரதமர் ரபீக் ஹரீரியின் கொலைவழக்கில் இஸ்ரேலின் பங்கைக் குறித்த ஆதாரம் உள்ளதாக ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஹரீரியின் பயண வழிகள் இஸ்ரேலிய உளவு விமானம் படம் பிடித்து உள்ளிட்ட ஆதாரங்களை ஹஸன் நஸ்ருல்லாஹ் பத்திரிகையாளர்களுக்கு முன்னிலையில் வரிசைப்படுத்தினார்.

பூரணமான நம்பிக்கை இல்லாததால் ஹரீரி கொலையைக் குறித்து விசாரிக்கும் புலனாய்வுக்குழுவிடம் ஆதாரங்களை வழங்க இயலவில்லை என அவர் தெரிவித்தார்.

1990 மற்றும் 2005 ஆம் ஆண்டிற்கிடையே இஸ்ரேலிய உளவு விமானம் படம் பிடித்த காட்சிகளை நஸ்ருல்லாஹ் காட்டினார். பெய்ரூட் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் ஹரீரி செல்லும் காட்சிகளாகும் அந்த வீடியோ.

கொலை செய்யப்பட்ட தினத்தில் ஹரீரி சென்ற பயணமும் அதில் உள்ளது. இதர இடங்கள் ஒன்றையும் காண்பிக்காத வீடியோவில் ஹரீரி செல்வது மட்டுமே காண்பிக்கப்படுகிறது. ஹரீரி கொல்லப்பட்ட தினத்தில் இஸ்ரேலி போர் விமானமும், கண்காணிப்பு விமானமும் லெபனானில் பறந்ததாக லெபனான் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹரீரி கொலை:இஸ்ரேலின் பங்கிற்கு ஆதாரமுள்ளது - ஹஸன் நஸ்ருல்லாஹ்"

கருத்துரையிடுக