23 ஆக., 2010

வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு உதவ அணு இழப்பீடு மசோதாவில் புதிய பிரிவு இணைப்பு

புதுடெல்லி,ஆக23:எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து திருத்தம் செய்யப்பட்ட அணு இழப்பீடு மசோதாவில் புதிய பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இம்மசோதாவில் 17-வதாக இப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேண்டுமென்றே அணுசக்தி விபத்து ஏற்பட்டால்தான் நஷ்ட ஈடு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.மனப்பூர்வமாக எவரேனும் விபத்து ஏற்பட்டது என்று எவரும் கூறமாட்டார்கள்.இதனால் விபத்து ஏற்பட்டால் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு தலை தப்பும் வகையிலேயே இந்த பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாராளுமன்ற நிலைக் குழுவிலும்,எதிர்கட்சி தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் ஏற்படுத்திய ஒத்து தீர்விற்கு மாற்றமாக இம்மசோதாவில் கடைசி நிமிடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பா.ஜ.க எதிர்த்துள்ளது.

அணுசக்தித்துறையை தனியார் மயமாக்குவதற்குத்தான் இந்த புதிய திருத்தம் என இடதுசாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு வழிவிட்டு ஆதரவு தெரிவிப்பதற்கு எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்க்கவேண்டுமென சி.பி.எம். பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், சி.பி.ஐ பொதுச்செயலாளர் எ.பி.பரதன், பார்வர்டு ப்ளாக் பொதுச்செயலாளர் பிஸ்வாஸ், ஆர்.எஸ்.பி தலைவர் அபனி ராய் ஆகியோர் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கையில் கோரியுள்ளனர்.

வெளிநாட்டு கம்பெனிகளை அணுசக்தித்துறையின் விநியோகிப்பாளர்களாக மாற்றிவிடாதீர்கள் என பாராளுமன்ற நிலைக்குழு உறுதியாக சிபாரிசுச் செய்தது என இடதுசாரிகள் தெரிவிக்கின்றனர்.

மசோதாவை வருகிற புதன்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் எதிர்ப்பு கிளம்பினால் ஒத்திவைக்கப்படுமா என்பது தெளிவாகவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு உதவ அணு இழப்பீடு மசோதாவில் புதிய பிரிவு இணைப்பு"

கருத்துரையிடுக