24 ஆக., 2010

விக்கி லீக் இணையதள நிறுவனர் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக புகார்

ஹோம்,ஆக24:தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகாரின் பின்னணியில் அமெரிக்க ராணுவ அமைப்பமான பென்டகன் இருக்கலாம் என விக்கி லீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசேன்ஜ் கூறியுள்ளார்.

ஜூலியன் அசேன்ஜ் (39) ஸ்வீடனில் வாழும் ஆஸ்திரேலிய நாட்டவராவார். இவர் விக்கி லீக்ஸ் என்ற இணைய தளத்தை துவக்கி நடத்தி வருகிறார்.

ஆஃப்கான் போர் தொடர்பாக அமெரிக்காவுக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய ஆவணங்களை அசேன்ஜ் தனது இணைய தளத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் மீது ஒரு பாலியல் புகார் கூறப்பட்டது. அவரை கைது செய்ய வாரண்டும் பிறப்பித்து சனிக்கிழமை உத்தரவிட்டது ஸ்வீடன் காவல்துறை. ஆனால் சில மணி நேரங்களிலேயே காவல்துறை தனது கைது வாரண்டை திரும்பப் பெற்றுக் கொண்டது.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்த ஜுலியன் அசேன்ஜ் "ஸ்வீடன் காவல்துறை எனக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து அதை உடனே வாபஸ் பெற்றுள்ளது. இந்தச் செயலுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தெரியவில்லை. அமெரிக்க ராணுவ அமைப்பான பென்டகன் இருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.

ஏற்கெனவே அவர்கள் என்னை மிரட்டி இருந்தார்கள். அமெரிக்காதான் இது போன்ற கீழ்த்தரமான தந்திரங்களைப் பயன்படுத்தும்" என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கி லீக் இணையதள நிறுவனர் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக புகார்"

கருத்துரையிடுக