காஸ்ஸா,ஆக24:ஃபலஸ்தீன் போராளி இயக்கமான ஹமாஸ் ஃபதாஹ் தலைவர்களுடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை காலவரையன்றி ஒத்திவைத்துள்ளது.
இதுத்தொடர்பாக ஹமாஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஸெலேஹ் அல் ப்ராடாவில் கூறுகையில், ஃபதாஹ் தலைவர்களை சந்தித்து பேசுவது முடியாத காரியம் எனக் குறிப்பிட்டார்.
இதுத்தொடர்பாக ஹமாஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஸெலேஹ் அல் ப்ராடாவில் கூறுகையில், ஃபதாஹ் தலைவர்களை சந்தித்து பேசுவது முடியாத காரியம் எனக் குறிப்பிட்டார்.
ஃபதாஹ்வுடன் வருகிற சனிக்கிழமை காஸ்ஸாவில் வைத்து இரு அமைப்புகளுக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தை நடத்த ஃபலஸ்தீன் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா அழைப்பு விடுத்திருந்தார். இவ்வழைப்பு உள்ளூர் மற்றும் பொதுத்தேர்தலை முன்னிறுத்தி விடுக்கப்பட்ட அழைப்பாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் செப்டம்பர் துவக்கத்தில் இஸ்ரேலியர்களும்,ஃபலஸ்தீனர்களும் பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என கூறியிருந்தார்.இவ்வழைப்பை ஃபதாஹ் தலைமையிலான அரசு ஒப்புக்கொண்டது. ஃபதாஹின் இம்முடிவுதான் பேச்சுவார்த்தை ஒத்திவைக்க காரணம் எனக் கூறப்படுகிறது.
ஹமாஸ் மற்றும் இதர இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை புறக்கணித்துள்ளன. ஃபலஸ்தீன் அதாரிட்டி அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணிந்துள்ளதாக இவ்வமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
செய்தி:Presstv
0 கருத்துகள்: on "ஃபதாஹ்வுடனான பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது ஹமாஸ்"
கருத்துரையிடுக