புதுடெல்லி,ஆக8:உருது மொழியினை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக் சபாவில் கூறினார்.
எல்லாக் கட்சிகளின் அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் மீரா குமார் அனைவரும் உருது மொழியினை மேம்படுத்துவதின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியதையடுத்து மத்திய அரசின் இந்த உறுதிப்பாடு வெளிப்பட்டது.
உருது மொழியின் முக்கியத்துவம் குறித்து எவ்வித முரண்பாடான கருத்துகளும் இல்லை. உருது மொழி இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதி எனவும் முகர்ஜி கூறினார்.
மேலும் அவர் மத்திய அரசு,எல்லா மாநில அரசுகளையும் உருது மொழியினை மேம்படுத்தும் நடவடிக்கைகளை துவங்க கேட்டுக்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் ஏற்கனவே தேவையான உத்தரவுகளை இது தொடர்பாக கொடுத்துவிட்டார். தேவையான ஊக்கத்தையும், நிதி உதவிகளையும் உருது மொழியினை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வழங்க வேண்டும் என வெளிப்படையாக கேட்டுக் கொண்டார்.
எல்லா அரசியல் கட்சிகளும் இவ்விஷயத்தில் ஒருமித்து குரலெழுப்பியதை அவர் பாராட்டினார். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்விஷயம் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவால் எழுப்பப்பட்டது.

0 கருத்துகள்: on "உருது மொழியினை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசு உறுதியளித்துள்ளது"
கருத்துரையிடுக