லண்டன்,ஆக8:தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனபாக்.அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.லண்டனில் வைத்து பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூனுடன் பேச்சுவார்த்தை நடந்து முடிந்து சில மணிநேரங்களில் இவ்வறிப்பை சர்தாரி வெளியிட்டார்.
பேச்சுவார்த்தை திட்டம் முடிவுறவில்லை எனவும்,அது எப்பொழுது வேண்டுமானாலும், துவக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சுவாத் பள்ளத்தாக்கில் பாக்.அரசு தாலிபானுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும் அவ்வொப்பந்தம் அதிக காலம் நீடிக்கவில்லை. அதேவேளையில், தாலிபானுடனான பேச்சுவார்த்தைக் குறித்த சர்தாரியின் அறிக்கை, தாலிபானுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற மேற்கத்திய நாடுகளுக்கிடையில் எதிர்ப்பைக் கிளப்பும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரபல அரசியல் பார்வையாளர் பி.ஜெ.மீர் இதனை அல்ஜசீரா தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே பிரிட்டன் பிரதமரும் பாக்.அரசின் தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கையில் போதாமையை விமர்சித்திருந்தார்.இது இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவில் நெருக்கடியை உருவாக்கியிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரு நாட்டு தலைவர்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதாக கருதப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "தாலிபானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஆஸிஃப் அலி சர்தாரி"
கருத்துரையிடுக