8 ஆக., 2010

தலித் கூட்டுப் படுகொலை: ஏழுபேர் குற்றவாளிகள்

ஹரியானா(ஜஜ்ஜார்),ஆக8:தலித்துகள் ஐந்து பேரை கூட்டுப் படுகொலை செய்த வழக்கில் ஏழு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. 19 பேர் விடுவிக்கப்பட்டனர்.

2002 அக்டோபர்15 ஆம் தேதி இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரப்பிய தலித் கூட்டுப் படுகொலை நிகழ்ந்தது.மேவாத் என்ற பகுதியைச் சார்ந்த ஐந்துபேரும் ஒரு டெம்போவில் சென்றுக் கொண்டிருந்தனர்.தசரா பண்டிகை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த கிராமவாசிகள் அந்த டெம்போவில் ஒரு பசுவைக் கண்டதைத் தொடர்ந்து தலித்துகள் 5 பேரை தடுத்து நிறுத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இவர்களின் கைது செய்தி பரவியதையடுத்து கூடுதலான கிராமவாசிகள் அங்குவந்து தலித்துகளை தண்டிக்கவேண்டும் என கோரினர்.

போலீசாரும்,மாவட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தபொழுதும், வெறிப்பிடித்த கிராமவாசிகள் போலீஸ் நிலையத்தை கைப்பற்றியதோடு ஐந்து தலித்துகளையும் கொடூரமாக அடித்துக் கொன்றனர்.
எட்டு ஆண்டு நீடித்த இவ்வழக்கு விசாரணையின் பொழுது குற்றஞ்சாட்டப்பட்ட 28 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தலித் கூட்டுப் படுகொலை: ஏழுபேர் குற்றவாளிகள்"

கருத்துரையிடுக