ஸ்ரீநகர்,ஆக8:மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விடுத்த அழைப்பை ஹுரியத் கட்சியின் இருபிரிவுகளின் தலைவர்களான கிலானியும்,மீர்வாய்ஸ் ஃபாரூக்கும் நிராகரித்துள்ளனர்.
கஷ்மீரை பிரச்சனைக்குரிய பகுதி என அங்கீகரித்து, கஷ்மீரிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறும் வரை பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என செய்யத் அலிஷா கிலானி தெரிவித்துள்ளார். இது சாத்தியமானால் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற ஐ.நா வின் தீர்மானம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை துவக்கலாம் எனவும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
போலீசாருக்கெதிராக நடத்திய கல்வீச்சை நிறுத்துமாறு நான் வேண்டுகோள் விடுத்ததை நான் என்னுடைய நிலைப்பாட்டை மிதப்படுத்தியதாக நடக்கும் பிரச்சாரம், கஷ்மீர் மக்களுக்கு என்மீதான மதிப்பைக் குறைக்கும் தந்திரமாகும்.
தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தைக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என மற்றொரு ஹுரியத் பிரிவின் தலைவரான மீர்வாய்ஸ் ஃபாரூக் தெரிவித்தார்.
தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடுபவர்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுபவர்கள் மீது பேச்சுவார்த்தை நடத்த எவ்வாறு சாத்தியமாகும்? என அவர் கேள்வி எழுப்பினார்.
மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற்று, அவர்களுக்கு வழங்கியுள்ள சிறப்புச்சட்டத்தை ரத்துச் செய்யவேண்டும் என்று நாங்கள் கோரிக்கைவிடுத்தும் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
கஷ்மீருக்கு சுதந்திரத்தைக் கோரும் ஜம்மு கஷ்மீர் லிபரேசன் ஃப்ரண்ட்(ஜெ.கெ.எல்.எஃப்) பேச்சுவார்த்தைக்கான அழைப்பு கபட நாடகம் என வர்ணித்துள்ளது.

கஷ்மீரிகளை கொல்வதும் பேச்சுவார்த்தையும் இணைந்து நடக்கமுடியாது என அவ்வியக்கத்தின் துணைத்தலைவர் பஷீர் அஹ்மத் தத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு முன்பு, போராட்டத்தில் ஈடுபட்டதாக கைதுச் செய்யப்பட்ட அனைவரையும் விடுதலைச் செய்யுமாறு பீப்பிள்ஸ் டெமோக்ரேடிக் பார்டியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.
ஒரு புறம் பேச்சுவார்த்தையைப் பற்றி கூறிவிட்டு மறுபுறம் கஷ்மீரின் தெருக்களில் அதிரடிப்படையினர் அணிவகுப்பு நடத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கஷ்மீரில் இளைஞர்களை சுட்டுக்கொல்வதற்கெதிராக போராட்டம் வலுவடைந்ததைத் தொடர்ந்து அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த நேற்று முன் தினம் பிரதமர் முடிவுச் செய்திருந்தார்.
கிலானி உள்ளிட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க வேண்டுமென்று ப.சிதம்பரம் எதிர்ப்பார்ப்பை தெரிவித்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பேச்சுவார்த்தை:மத்திய அரசின் கோரிக்கையை கிலானியும், மீர்வாய்சும் நிராகரித்தனர்"
கருத்துரையிடுக