கொல்கத்தா,ஆக,3:"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கோரியுள்ளார்.
தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கடந்த வாரம் குறிப்பிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க அரசு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கு ஆயுதம் சப்ளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: "சட்டசபை தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து வருவதால் மாநிலத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட இடதுசாரி அரசு திட்டமிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை பாதுகாக்க விட்டால் தெருவில் இறங்கி காலவரையற்ற போராட்டம் நடத்துவோம். ஆயுதம் பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கிறது. போலீசார் தங்கள் கடமையை பாரபட்சமின்றி செய்ய வேண்டும்." இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

0 கருத்துகள்: on "மார்க்சிஸ்ட் தொண்டர்களிடம் ஆயுதங்களை பறிமுதல் செய்ய உள்துறை அமைச்சருக்கு மம்தா கோரிக்கை"
கருத்துரையிடுக