3 ஆக., 2010

முஸ்லிம் லீக் தலைவர் சையத் முஹமத் தங்கல் தபால் தலையை பிரதமர் வெளியிட்டார்

புதுடில்லி,ஆக,3:கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவரான மறைந்த ஜனாப் சையத் முஹமத் தங்கல் தபால் தலையை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று வெளியிட்டார். கேரள முஸ்லிம் லீக் முன்னாள் தலைவரான ஜனாப் சையத் முஹமத் தங்கல்,கேரளாவில் முதன் முதலாக கூட்டணி ஆட்சி ஏற்பட வழி வகுத்தவர். அவருடைய சேவைகளை பாராட்டி டில்லியில் நேற்று நடந்த விழாவில் தபால் தலை வெளியிடப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங், தங்கலின் தபால் தலையை வெளியிட்டு பேசுகையில், "அரபு மொழியில் புலமை பெற்ற தங்கல், நம்நாட்டின் மதசார்பற்ற தன்மையை ஊக்குவித்தவர். 1992ம் ஆண்டு கேரளாவில் மதகலவரம் தொடர்பாக பதட்டம் ஏற்பட்டபோது அமைதியை ஏற்படுத்தியவர். ஏழைகள் வளம் பெற பாடுபட்டவர். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த தபால் தலையை வெளியிடுவதில் பெருமையடைகிறேன்" என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஸ்லிம் லீக் தலைவர் சையத் முஹமத் தங்கல் தபால் தலையை பிரதமர் வெளியிட்டார்"

கருத்துரையிடுக