இஸ்லாமாபாத்,செப்.15:வடக்கு வசீரிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ட்ரோன் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மிரன்ஷாஹில் ஷாவலில் ஒரு வீட்டின் மீது 3 ஏவுகணைகள் ஏவப்பட்டது என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீட்டின் சிதறிய பாகங்களுக்கிடையே ஏராளமானோர் சிக்கியுள்ளதால் மரண எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. 11 தினங்களுக்கிடையே 10-வது தாக்குதல் இது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் அமெரிக்க ராணுவம் தாக்குதலை வலுப்படுத்தியுள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல் தங்களது இறையாண்மைக்கு விடுத்த சவால் என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டு பழங்குடியினர் பகுதியில் 700 க்கும் மேற்பட்டோர் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்: 15 பேர் மரணம்"
கருத்துரையிடுக