21 செப்., 2010

தாஜிகிஸ்தானில் போராளிகள் 23 ராணுவத்தினரை கொன்றனர்

துஷான்பெ,செப்.21:தாஜிகிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது எதிர்ப்பு போராளிகள் நடத்திய தாக்குதல் 23 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

மலைப் பிரதேசமான ரஸ்த்வேலியில் ரோந்துச் சென்றுக் கொண்டிருந்தபொழுதுதான் இத்தாக்குதல் நடைபெற்றது.

மலை உச்சியிலிருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் பரீதுன் முஹம்மதலியேவ் தெரிவிக்கிறார்.

கிரேனேட் லாஞ்சர்கள், எந்திரத் துப்பாக்கிகள் ஆகியன பயன்படுத்தி இத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 40 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,செச்னியா ஆகிய நாடுகளிலுள்ள போராளிகளுடன் தொடர்புடையவர்கள்தான் தாக்குதல் நடத்தியதாக முஹம்மதலியேவ் தெரிவிக்கிறார்.

தாஜிக் ஆட்சியாளர்களுக்கெதிராக 1990 களில் நடந்த உள்நாட்டு போருக்கு தலைமை வகித்த யுனைட்டட் தாஜிக் ஆப்போஷிஷனின் முன்னாள் ஃபீல்டு கமாண்டர்கள்தான் இத்தாக்குதலுக்கு தலைமை வகித்துள்ளதாக முஹம்மதலியேவ் தெரிவிக்கிறார்.

முஸ்லிம், தேசியவாதிகளின் ஒருங்கிணைந்த அமைப்புதான் தாஜிக் ஆப்போஷிஷன். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தாஜிகிஸ்தானில் தீவிரவாதம் வளர்வதாக அந்நாட்டு அரசு கவலைத் தெரிவித்திருந்தது. ஆனால், எதிர்கட்சியை ஓரங்கட்ட அதிபர் இமாமலி ரஹ்மானோவ் இஸ்லாமிய தீவிரவாத அச்சுறுத்தலை பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

இந்த மாதம் துவக்கத்தில் தாஜிகிஸ்தான் போலீஸ் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்ட ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.

கடந்த மாதம் துஷான்பேயில் சிறையிலிருந்து இஸ்லாமிய போராளிகளுடன் தொடர்புடைய 25 பேர் தப்பினர். ஜெயில் காப்பாளரை கொன்றபிறகு அவர்கள் தப்பிச் சென்றனர். தப்பிச்சென்ற சிறைக்கைதிகளைக் குறித்து விசாரணை நடந்துவரும் வேளையில் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. தப்பிச் சென்ற சிறைக்கைதிகளில் இதுவரை 7 பேரை மட்டுமே போலீஸ் கைதுச் செய்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தாஜிகிஸ்தானில் போராளிகள் 23 ராணுவத்தினரை கொன்றனர்"

கருத்துரையிடுக