இஸ்லாமாபாத்,செப்.21:அமெரிக்க சிறையிலிலுள்ள பாகிஸ்தானைச் சார்ந்த பெண் மருத்துவர் டாகடர்.ஆஃபியா சித்தீக்கியை ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆஃபியா சித்தீக்கியின் சிறை பாகிஸ்தானில் பொதுவிவாதமாக மாறியுள்ளது எனவும் அவரை விடுதலைச் செய்வது அமெரிக்காவிற்கு சாதகமாக மாறும் எனவும் ரஹ்மான் மாலிக் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகள் தொடர்பான ஐ.நாவின் கன்வென்ஷன் தீர்மானத்தின்படி ஆஃபியாவை ஒப்படைக்கவேண்டும் எனவும், ஆஃபியாவின் இரு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி, அவருடைய தாயார் நோய்வாய்ப்பட்ட நிலையில் மனித உரிமையைக் கணக்கில் கொண்டு அவரை விடுதலைச் செய்யவேண்டும் என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரலாற்றில் மனித உரிமையைக் கணக்கில் கொண்டு சிறைக்கைதிகளி விடுதலைச்செய்த 90 நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன என ரஹ்மான் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆஃபியா சித்தீக்கியை ஒப்படைக்க பாகிஸ்தான் கோரிக்கை"
கருத்துரையிடுக