22 செப்., 2010

பாப்ரி மஸ்ஜித்:தடைக்கோரிய மனு தள்ளுபடி, நீதிமன்றத்தில் ஊடகங்களுக்கு தடை

லக்னோ,செப்.22:அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலம் தொடர்பான வழக்குத் தீர்ப்பைக் குறித்து குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்) வாக்கெடுப்பும், ஊடகங்களில் விவாதங்களையும் தடைச்செய்ய வேண்டும் என கோரிய மனுவை தள்ளுபடிச் செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

பேச்சு சுதந்திரம் அனைவருடைய உரிமை என மனுவை தள்ளுபடிச் செய்த தலைமை நீதிபதி எஃப்.எ.ரெபெலோ, நீதிபதி ப்ரதீப்காந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கருத்துத் தெரிவித்தது.

வழக்கறிஞரான ப்ரின்ஸ் லெனின் என்பவர்தான் இந்த வழக்கு மனுவை தாக்கல் செய்தார். தேசிய ஒலிபரப்பு சங்கம் ஊடகங்களுக்கு வழிகாட்டுதல் உபதேசம் வழங்கியிருப்பதாக இவ்வழக்கில் வாதம் நடைபெறும் பொழுது மத்திய அரசு நீதிமன்றத்திற்கு கடிதம் அளித்திருந்தது.

வருகிற செப்.24 அன்று பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு கூறப்படும் பொழுது ஊடகங்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரிடமிருந்து தீர்ப்பின் நகல்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படும். தீர்ப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு செய்தியை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வசதி ஏற்படுத்தப்படும் என மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அனில்குமார் ஸாகர் அறிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:தடைக்கோரிய மனு தள்ளுபடி, நீதிமன்றத்தில் ஊடகங்களுக்கு தடை"

கருத்துரையிடுக