ஸ்ரீநகர்,செப்.22:கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக கஷ்மீர் சென்றுள்ள அனைத்துக்கட்சி பிரதிநிதிக்குழு ஹுர்ரியத் தலைவர்களை சந்தித்து பேசியது பா.ஜ.கவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சீதாராம் யெச்சூரி, ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் தலைமையிலான குழு ஹுர்ரியத் தலைவர்களான செய்யத் அலிஷா கிலானி, மீர்வாய்ஸ் ஃபாரூக் மற்றும் ஜெ.கெ.எல்.எஃப் தலைவர் யாஸீன் மாலிக் ஆகியோரை சந்தித்தது. இது பா.ஜ.கவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்துக்கட்சி பிரதிநிதிக் குழுவில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் சிலர் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்துக்கட்சிக் குழுவின் தீர்மானத்தின் படி அல்ல என பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அனைத்துக் கட்சிக்குழு பிரதிநிதிகள் ஹுர்ரியத் தலைவர்களை சந்தித்தது கூட்டாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படிதான் என கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவிக்கிறார். சமீபத்தில் கடுமையான மக்கள் கொந்தளிப்பை உருவாக்கிய தாங்மார்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் வந்திருந்தார் அவர். கஷ்மீரின் நிலைமையைக் குறித்த தெளிவான பார்வை கிடைக்க இந்த சந்திப்புகள் உதவின என அவர் தெரிவித்தார்.
முக்கிய அரசியல் கட்சிகள் மட்டுமல்ல பிரிவினையைக் கோரும் அமைப்புகளும் கஷ்மீரில் உண்டு. கஷ்மீரின் உண்மையான நிலை என்ன என்பதை அனைத்துக்கட்சி பிரதிநிதிக் குழுவிற்கு புரியவைப்பதுதான் அரசின் நோக்கம் என உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அனைத்துக்கட்சி பிரதிநிதிக்குழு ஹூர்ரியத் தலைவர்களை சந்தித்ததில்"
கருத்துரையிடுக