22 செப்., 2010

மத்திய அரசின் ஹஜ் கொள்கை தொடரலாம்: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி,செப்.22:மத்திய அரசின் ஹஜ் கொள்கை தொடர்பான கேரள மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்துச் செய்தது உச்சநீதிமன்றம்.

மத்திய அரசின் ஹஜ் கொள்கையில் தற்பொழுது தலையிட முடியாது எனக்கூறிய உச்சநீதிமன்றம் மத்திய அரசால் தேர்வுச் செய்யப்பட்டுள்ள தனியார் டூர் ஆபரேட்டர்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் சர்வீஸ் நடத்தலாம் என தீர்ப்புக் கூறியது.

அனுமதிக் கோரியுள்ள 38 தனியார் ஹஜ் குரூப்களுக்கு சேவையாற்ற உரிமம் வழங்கவும், 2009 ஆம் ஆண்டு ஹஜ் கொள்கையை தொடரவேண்டும் என சுட்டிக்காட்டிய கேரள உயர்நீதிமன்றம், ஹஜ் கொள்கையை புனர்பரிசோதிக்க மத்திய அரசை கோரியிருந்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில்தான் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

தற்போதைய சூழல்களைக் கருத்தில் கொண்டு ஹஜ் புனித யாத்திரையை தொடரலாம் எனவும் இந்தக் கட்டத்தில் இவ்விஷயங்களில் தலையிட முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.

முந்தைய ஆண்டுகளின் செயல்பாடுகளை மதிப்பீடுச் செய்துதான் பி.டி.ஓக்கள் (தனியார் டூர் ஆபரேட்டர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் எனவும், மத்திய அரசின் கொள்கை ரீதியான விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஹஜ் யாத்திரை என்பது இந்தியாவிற்கும் சவூதிஅரேபியாவிற்கும் நட்புறவு ஒப்பந்தமாகும். ஹஜ்ஜில் பங்கெடுப்போரின் பட்டியல் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் கடந்த மாதம் 25 ஆம் தேதியாகும். இந்த பட்டியல் இதுவரை அனுப்பவில்லை என்பதை கேள்விக்கேட்டு சவூதி ஹஜ் அமைச்சகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இனியும் தாமதித்தால் தனியார் ஹஜ் நிறுவனங்கள் வழியாக செல்லும் 45 ஆயிரம் புனித யாத்ரீகர்களின் பயணம் தடைப்படும்.

இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்ரீகர்களின் பயணம் தடைப்பட்டால் அதன் பொறுப்பு இந்திய அரசு மட்டும்தான் என சவூதி அரேபியா எச்சரித்துள்ளது. ஹஜ் யாத்திரை தடைப்பட்டால் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு கூட பாதிக்கப்படலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்தது. சவூதி ஹஜ் அமைச்சகம் அனுப்பிய கடித ஆவணங்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மத்திய அரசின் ஹஜ் கொள்கை தொடரலாம்: உச்சநீதிமன்றம்"

கருத்துரையிடுக