22 செப்., 2010

ஆப்கானில் ஹெலிகாப்டர் வீழ்ந்து ஒன்பது நேட்டோ ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்

காபூல்,செப்.22:தெற்கு ஆப்கானில் ஸாபூல் மாகாணத்தில் நேட்டோ ராணுவத்தினரின் ஹெலிகாப்டர் வீழ்ந்து ஒன்பது நேட்டோ ராணுவத்தினர் மரணமடைந்தனர். அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.

ஒரு ஆப்கான் ராணுவவீரன், ஒரு நேட்டோ ராணுவ வீரன், ஒரு சிவிலியன் ஆகியோர் இதில் காயமடைந்தனர். ஹெலிகாப்டர் எவ்வாறு விபத்திற்குள்ளானது என்பது இதுவரை தெளிவாகவில்லை. எதிரிகளின் தாக்குதல்கள் ஒன்றும் நடைபெறவில்லை என நேட்டோ ராணுவம் கூறியுள்ளது.

அதேவேளையில் நேட்டோ ஹெலிகாப்டரை தாங்கள் சுட்டுவீழ்த்தியதாக தாலிபான் போராளிகள் கூறியுள்ளனர். தாலிபானின் செய்தித் தொடர்பாளர் காரி யூசுஃப் தொலைபேசி மூலம் அசோசியேட் பிரஸ்ஸிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இத்துடன் 2001 ஆம் ஆண்டு ஆப்கானை அந்நிய நாடுகளின் ராணுவத்தினர் ஆக்கிரமித்ததிலிருந்து அவர்களுக்கு ஏற்பட்ட அதிகமான உயிரிழப்பு ஆண்டாக 2010 மாறியது. இவ்வாண்டு இதுவரை 525 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கொல்லப்பட்ட அந்நிய ராணுவத்தினரின் எண்ணிக்கை 504 ஆகும்.

கடந்த மாதம் கனடா நாட்டைச் சார்ந்த கனேடியன் சினூக் ஹெலிகாப்டர் தகர்ந்து வீழ்ந்து எட்டு கனடா நாட்டு ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆப்கானில் ஹெலிகாப்டர் வீழ்ந்து ஒன்பது நேட்டோ ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்"

கருத்துரையிடுக