22 செப்., 2010

சவூதியில் பொதுமன்னிப்பு

ரியாத்,செப்.22:இதர வளைகுடா நாடுகளை பின்பற்றி சவூதி அரேபியாவும் சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் வசிக்கும் வெளி நாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வெளியேற உத்தரவிட்டுள்ளது.

வருகிற செப்.25 முதல் 2011 ஆம் ஆண்டு மார் 23 வரையிலான 6 மாத கால அவகாசம் இதற்காக வழங்கப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் உம்ரா விசா, ஹஜ் விசா, சுற்றுலா விசா ஆகியவற்றில் சவூதி அரேபியாவிற்கு வருகை தந்து விசா காலாவதியான பிறகும் சவூதியில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் சரணடைந்து நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விசா காலாவதியாகிவிட்டால் 10 ஆயிரம் ரியால் அபராதமாக செலுத்தவேண்டும் என்பது சட்டம். ஆனால் பொதுமன்னிப்புக் காலக்கட்டத்தில் போதிய ஆவணங்கள் இல்லாமல் சவூதியில் சிக்கியவர்கள் அபராதம் கட்டாமல் நாட்டை விட்டு வெளியேறலாம். லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சவூதியில் பொதுமன்னிப்பு"

கருத்துரையிடுக