18 செப்., 2010

பாப்ரி:தீர்ப்பு 24-ஆம் தேதி திட்டமிட்டப்படி வழங்கப்படும்

லக்னோ,செப்.18:60 வருடக்கால பழமையான பாப்ரி மஸ்ஜித் நில உரிமைத் தொடர்பான வழக்கில் தீர்ப்புக் கூறுவதை ஒத்திவைக்க வேண்டும் என்றக் கோரிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.

ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே இணக்கமான தீர்விற்கு வழிகாண தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் எனக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவின் மீதான விசாரணையில்தான் 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை நேற்றுக் கூறியது. பாப்ரி மஸ்ஜித் நில உரிமை தொடர்பான தீர்ப்பு திட்டமிட்டபடி வருகிற 24-ஆம் தேதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வழக்கை ஒத்திவைக்கக் கோரும் மனுவில் முக்கியத்துவம் இல்லை எனக் கருதிய நீதிமன்றம் மனுவை சமர்ப்பித்தவருக்கு பெருந்தொகையை அபாரதமாக விதிக்க தீர்மானித்தது. அபராதத்தொகை எவ்வளவு என்று முடிவாகவில்லை.

நீதிபதி சுதீர் அகர்வால் ஐந்துலட்சம் ரூபாய் அபராதமாக நிர்ணயித்தார். எஸ்.யு.கான், டி.வி.சர்மா ஆகியோர் சிறப்பு பெஞ்சின் இதர நீதிபதிகளாவர். 'இணக்கமான தீர்விற்கு தயாரா?' என நீதிமன்றம் கட்சிதாரர்களிடம் ஆராய்ந்தது. ஆனால், எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. தங்களுக்கு அவ்வாறான நம்பிக்கை இல்லையென அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, வழக்கில் முக்கிய கட்சிதாரரான நிர்மோஹி அகாரா, சமரச தீர்விற்கு இந்த மாதம் 27-ஆம் தேதி வரை கால அவகாசம் நிர்ணயிக்கவேண்டும் என்று கோரும் மனுவை சமர்ப்பித்துள்ளார்.

இதற்கிடையே சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக உச்சநீதிமன்றத்தை அணுக தனது கட்சிதாரரை உபதேசிப்பேன் என திரிபாதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு அளிப்பது நீதிமன்றத்தின் கடமையென்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்துள்ளார்.

வழக்கை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடிச் செய்தது மூலம் உயர்நீதிமன்றம் சரியான காரியத்தை செய்துள்ளது என முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி:தீர்ப்பு 24-ஆம் தேதி திட்டமிட்டப்படி வழங்கப்படும்"

கருத்துரையிடுக