21 செப்., 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:32 இடங்களில் வன்முறை உருவாக வாய்ப்பு

புதுடெல்லி,செப்.21:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 அன்று தீர்ப்பு வரவிருக்கவே 32 பிரதேசங்களில் வன்முறை உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

உத்தரபிரதேசம், குஜராத், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வன்முறை நடக்க வாய்ப்புள்ளது. இந்த மாநிலங்கள் உட்பட அனைத்து மாநில அரசுகளுக்கும் பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பையொட்டி பாதுகாப்பு ஏற்படுகளை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிரடிப்ப்டை உள்ளிட்ட 5200 ஆயுதப் படையினரை உ.பி மாநிலத்திற்கு அனுப்ப மத்திய அரசு தீர்மானித்துள்ளது. தாங்கள் கோரிய 63000 துணை ராணுவப்படையினரை அனுப்பாமல் 5200 பேரை மத்திய அரசு அனுப்ப தீர்மானித்திருப்பதில் உ.பி. மாநில அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

தேசத்தில் எப்பகுதியிலாவது தீர்ப்பைத் தொடர்ந்து பிரச்சனை உருவானால் அங்கு உடனடியாக செல்வதற்கு வசதியாக விமானநிலையங்களுக்கு சமீபமாக துணை ராணுவப்படையினர் தயார் நிலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:32 இடங்களில் வன்முறை உருவாக வாய்ப்பு"

கருத்துரையிடுக