21 செப்., 2010

ஹிஜாபிற்கு விதிக்கவிருக்கும் தடையை எதிர்த்து ஆஸ்திரேலியாவில் முஸ்லிம் பெண்கள் பேரணி

சிட்னி,செப்.21:ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் உட்பட பலர், அரசு விதிக்கவிருக்கும் ஹிஜாப் தடையை எதிர்த்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அரசுக்கு செனட் உறுப்பினர் கோரி பெர்னார்டி பரிந்துரைத்துள்ள 'ஹிஜாப்' என்னும் ஆடைக்கு விதிக்கவிருக்கும் தடையை எதிர்த்து பேரணியில் ஈடுபட்டனர்.

ஹிஸ்புத் தஹ்ரீர் (Hizbut Tahrir) என்னும் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சிட்னி சன்டே ஹெரால்ட் என்னும் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் "பெண்களை இஸ்லாம் சிறுமைப்படுத்துகிறது என்று திட்டமிட்டு பரப்பிவரும் அவதூறுகளை பரப்புவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும் "உலகம் முழுவதும் மதம் மாறும் பெண்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், அதிகமாக அளவில் முஸ்லீம் மதத்தையே ஏற்றுக்கொண்டு, இஸ்லாம் அறிவுறுத்தும் கண்ணியமான ஆடை முறைகளையே விரும்பிப் பின்பற்றுகிறார்கள்" என்றும் கூறியுள்ளார்.

மேற்கு உலகம் நடைமுறைப்படுத்தும் சமத்துவத்தை விட, இஸ்லாம் போதிக்கும் மனித மதிப்பு சிறந்தது என்று சவால் விட்டுள்ளார்.

"தன்னுடைய உடலை அந்நிய ஆண்கள் பார்க்க கூடாது என நான் விரும்புவது எனது சுதந்திரம். இந்த ஆடையின் மூலம் சமுகத்தில் அந்நிய ஆண்கள் கண்களில் இருந்து எனது உடலை மறைத்து என்னால் சுதந்திரமாக செயல் பட முடியும்" என்று ஏழு தலைமுறைகளாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் உம்மு ஜமாலுதீன் என்ற பெண் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பெண்கள் எப்படி தோற்றமளிக்க வேண்டும், கூடாது என்று நிர்ணயிக்கும் தற்போதைய ஆணாதிக்கத்தில் உள்ள நவீன ஆடை உலகத்திற்கு நாங்கள் அடிமையாக முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

செனட் உறுப்பினர் கோரி பெர்னார்டி பரிந்துரைத்த 'ஹிஜாப்' தடைக்கு ஆதரவு அளிக்காத மற்ற பெரும்பான்மை செனட் உறுப்பினர்களுக்கு இந்தப் பேரணியில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிஜாபிற்கு விதிக்கவிருக்கும் தடையை எதிர்த்து ஆஸ்திரேலியாவில் முஸ்லிம் பெண்கள் பேரணி"

கருத்துரையிடுக