காஸ்ஸா,செப்.14:காஸ்ஸா எல்லையில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் டாங்கர்கள் 3 ஃபலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றது.
எல்லையில் பைத் ஹானூன் நகரத்தில்தான் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சுகாதாரத்துறையும், நேரில் கண்ட சாட்சிகளும் தெரிவிக்கின்றனர்.
91 வயதான முதியவரும், அவருடைய பேரனும்தான் மரணித்தவர்களில் இருவர். அதேவேளையில், போராளி இயக்கமான ஹமாஸ் நடத்திய ராக்கெட் தாக்குதலில் சேதம் ஏற்பட்டதுக் குறித்த தகவல் ஒன்றும் வெளியிடப்படவில்லை.
பண்ணையில் தொழிலாளியான முதியவர் கொல்லப்பட்டார் என காஸ்ஸா மெடிக்கல் சர்வீஸ் செய்தித் தொடர்பாளர் ஆதம் அபூ ஸாலிமா தெரிவிக்கிறார்.
கடுமையாக காயம் அடைந்த இளைஞர் ஒருவர் பின்னர் இறந்து போனார். கொல்லப்பட்ட மூன்றாவது நபரின் பெயர் தெரியவில்லை. ஆனால், கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என இஸ்ரேல் ரேடியோ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலுக்காக உளவுவேலைப் பார்த்த 5 பேர்களை ஹமாஸ் கைதுச் செய்தது. ஹமாஸின் பாதுகாப்பு அதிகாரி இரவு நடத்திய சோதனையில் 5 பேர் சிக்கியுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "காஸ்ஸா எல்லையில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி"
கருத்துரையிடுக