ஜெருசலம்,செப்.14:பாதியளவில் முடக்கப்பட்ட நிர்மாண நடவடிக்கையை ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
ஃபலஸ்தீன் அதாரிட்டியுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைக்காக 10 மாதங்கள் குடியேற்ற நிர்மாண நடவடிக்கையை நிறுத்திவைக்க வேண்டுமென ஒபாமா கடந்த வெள்ளிக்கிழமை கோரியிருந்தார். இதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
ஃபலஸ்தீனிகள் இஸ்ரேலை யூத நாடாக அங்கீகரிப்பதுதான் அமைதிக்கான ஒரே வழி எனக் கூறுகிறார் நெதன்யாகு. குடியேற்ற நிர்மாணத்தை பூரணமாக நிறுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னர், ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பியன் யூனியன், ரஷ்யா ஆகியவற்றின் மேற்காசிய பிரதிநிதியான டோனி ப்ளேரிடம் குடியேற்றத்தை நிறுத்தப் போவதில்லை என நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
மொரட்டோரியம் பிரகடனப்படுத்திய பிறகும் இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை தொடர்கிறது. நெதன்யாகுவின் அறிக்கை இன்று எகிப்தில் நடைபெறும் ஃபலஸ்தீன்-இஸ்ரேல் பேச்சுவார்த்தையை பாதிக்கும் என கருதப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "குடியேற்ற நிர்மாணம்:ஒபாமாவின் கோரிக்கையை நெதன்யாகு நிராகரித்தார்"
கருத்துரையிடுக