18 செப்., 2010

கஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; மேலும் 3 பேர் மரணம்

ஸ்ரீநகர்,செப்.18:ஊரடங்கு உத்தரவுத் தொடரவே கஷ்மீரில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் மரணமடைந்தனர்.

ஐந்து இடங்களில் நேற்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 30 பேருக்கு காயமேற்பட்டது. கல்வீச முயன்ற மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் கூறுகிறது.

புக்தாம் மாவட்டத்தில் சூர்புராவில் ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான பேர்கள் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஃபயாஸ் அஹ்மத் தர் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.ஐந்துபேருக்கு காயம் ஏற்பட்டது.

பாராமுல்லா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குலாம் ரசூல் தத் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். எட்டுபேருக்கு காயம் ஏற்பட்டது. புல்வாமாவில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இம்தியாஸ் அஹ்மத் மருத்துவமனையில் சிகிட்சை பலனின்றி மரணமடைந்தார். இத்துடன் கடந்த ஜூன் 11 முதல் துவங்கிய கஷ்மீர் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில்
மரணித்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில், மராமத்துப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த ஸ்ரீநகர் விமானநிலையம் திறக்கப்பட்டது. இதற்கிடையே, கஷ்மீரில் ஊரடங்கு உத்தரவிலிருந்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை விலக்கு அளிக்கவேண்டும் எனக்கோரி ஜம்மு கஷ்மீர் சிறுத்தைகள் கட்சி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

மருந்துக்கடைகள்,க்ளீனிக்குகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றையும் விலக்கவேண்டும் என அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று டெல்லியில் மூத்த தலைவர்களுடன் கஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்தார்.

முன்னர் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கஷ்மீருக்கு அனைத்துக் கட்சியினரின் பிரதிநிதிக்குழு செல்வதாக தீர்மானிக்கப்பட்டிருந்த வேளையில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அமைச்சர்களும், பிரபல தலைவர்களான பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ப.சிதம்பரத்தையும், பிரணாப் முகர்ஜியையும் அனைத்துக்கட்சி பிரதிநிதிக்குழுவில் உட்படுத்தவும் அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; மேலும் 3 பேர் மரணம்"

கருத்துரையிடுக