22 செப்., 2010

இந்தியா உலகில் 3-வது சக்திமிகுந்த நாடு- அமெரிக்கா

வாஷிங்டன்,செப்.22:அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா சக்திமிகுந்த நாடு என அதிகாரப்பூர்வ அமெரிக்க அறிக்கையொன்று கூறுகிறது.

2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் நிலை மீண்டும் உயரும் என க்ளோபல் கவர்னன்ஸ்-2025 என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையினை அமெரிக்க நேசனல் இண்டலிஜன்ஸ் கவுன்சிலும், ஐரோப்பிய யூனியன் இன்ஸ்ட்யூட் ஃபார் செக்யூரிட்டியும் இணைந்து தயாரித்துள்ளன.

சர்வதேச சக்திகளின் 22 சதவீதம்தான் என்ற நிலையில் அமெரிக்காவிற்கு இப்பட்டியலில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. சீனாவுக்கும், ஐரோப்பியன் யூனியனுக்கும் 16 சதவீதமும், இந்தியாவுக்கு 8 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு பின்னர் ஜப்பான், ரஷ்யா,பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன. ஆனால் 2025 ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பியன் யூனியன், ஜப்பான்,ரஷ்யா ஆகியவற்றின் வலிமைக் குறையும் என்றும், இந்தியாவும்,சீனாவும், பிரேசிலும் முன்னணியில் குதிக்கும் எனவும் அவ்வறிக்கைக் கூறுகிறது. அப்பொழுதும் பட்டியல் தரத்தில் மாற்றம் ஏற்படாது.

உலக சக்திகளில் அமெரிக்காவும் சீனாவும் 16 சதவீதமாகவும் ஐரோப்பியன் யூனியன் 14 சதவீதமாகவும், இந்தியா சற்று முன்னேறி 10 சதவீதமாகவும் பட்டியலில் இடம்பெறும். பருவநிலைமாற்றம், உள்நாட்டு, மத மோதல்கள், நவீன தொழில்நுட்பம், இயற்கை வளங்களை கையாளுதல் ஆகிய காரணிகள் உலக சக்திகளை நிர்ணயிப்பதில் திருப்புமுனையாகும் என கணக்கிடப்படுகின்றது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியா உலகில் 3-வது சக்திமிகுந்த நாடு- அமெரிக்கா"

கருத்துரையிடுக