22 செப்., 2010

ஈராக் பிரதமர் அலுவலகத்தில் காணாமல் போன புராதன பொருட்கள்

பாக்தாத்,செப்.22:ஈராக்கிலிருந்து காணாமல்போன புராதனப் பொருட்கள் பிரதமர் நூரி அல் மாலிக்கின் அலுவலகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன. இவை உடனடியாக தேசிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டன.

ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையான இந்த புராதனப் பொருட்கள் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பொழுது அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டன.

வலுவான எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து அமெரிக்கா 2009 ஆம் ஆண்டு அவற்றை ஈராக்கிடம் ஒப்படைத்தது. பின்னர்தான் இவை காணாமல் போயின. 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழலில் மெசப்படோமியாவின் 7000 ஆண்டுகள் நீண்ட நாகரீகத்தின் வரலாற்றுக் குறிப்புகள் உள்பட ஆயிரக்கணக்கான புராதனப் பொருட்கள் ஈராக்கில் காணாமல் போயின. இவற்றில் பாதியளவுதான் திரும்பக் கிடைத்தது.

பிரதமரின் அலுவலகத்தில் அமைந்துள்ள சமையலறையின் பொருள்களை பாதுகாக்கும் அறையில் 638 பொருட்கள் பெட்டிகளில் கட்டப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

ஆபரணங்கள், களிமண் டாப்லெட்டுகள், வெங்கல சிலைகள் ஆகியன கண்டெடுக்கப்பட்ட புராதனப் பொருட்களில் அடங்கும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சேகரிப்பு இது என ஈராக்கின் தேசிய அருங்காட்சியக இயக்குநர் ஆமிரா ஈதான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய, சுமேரிய, பாபிலோன் காலக்கட்டங்களிலிலுள்ள பொருட்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. புராதனப் பொருட்கள் பரிமாற்றத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் அப்பொருட்கள் காணாமல் போக காரணம் என புராதன பொருட்கள் துறை அமைச்சர் கதன் அல் ஜுபூரி தெரிவிக்கிறார்.
செய்தி:தேஜஸ் தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈராக் பிரதமர் அலுவலகத்தில் காணாமல் போன புராதன பொருட்கள்"

கருத்துரையிடுக