9 செப்., 2010

மேற்குவங்கம்:கலவரம்-ராணுவம் களமிறங்கியது

கொல்கத்தா,செப்.9:இரண்டு பிரிவினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து வணக்கஸ்தலங்கள் அசுத்தமாக்கப்பட்ட சூழலில் மேற்குவங்காள மாநிலம் வடக்கு 24-பர்ஹானாஸ் மாவட்டத்தில் ராணுவம் களமிறங்கியுள்ளது.

அமைதியை நிலைநாட்டுவதில் துணை ராணுவப் படையினருக்கு உதவும் வகையில் ராணுவம் இறக்கப்பட்டுள்ளது.

தெகங்கா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மாஜிஸ்ட்ரேட் விநோத்குமார் தெரிவித்தார். வன்முறையில் துணை போலீஸ் சூப்பிரண்ட் ஒருவருக்கும், ஒரு உள்ளூர்வாசிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு மத வணக்கஸ்தலத்திற்கு முன்பாக இன்னொரு பிரிவினரின் ஊர்வலம் செல்லுவதுத் தொடர்பான தகராறு கலவரத்தில் முடிவடைந்துள்ளது.

தெகங்கா பகுதியில் ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தியது. வன்முறை பரவாமலிருக்க அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விநோத்குமார் தெரிவித்துள்ளார். வன்முறையாளர்கள் வாகனங்களுக்கு தீவைத்து கொள்ளையடிக்கவும் செய்துள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மேற்குவங்கம்:கலவரம்-ராணுவம் களமிறங்கியது"

கருத்துரையிடுக