8 செப்., 2010

காவி தீரவாதம்:ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்காவிடில் போராட்டம்: பாஜக

ஜெய்ப்பூர்,செப்.8:காவி பயங்கரவாதம் என்று கருத்து தெரிவித்ததற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு கோராவிடில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக முன்னாள் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.

ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது: "உள்துறை அமைச்சர் சிதம்பரம் மிக மோசமான தவறை செய்துள்ளார். தான் தெரிவித்த கருத்தை திரும்பப் பெற்று மன்னிப்பு கோரவேண்டும். அல்லது பிரதமர் தலையிட்டு அவரை மன்னிப்பு கேட்கச் செய்யவேண்டும். இல்லையெனில் தேசிய இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இந்தப் பிரச்னையை தேசிய அளவில் கொண்டுசெல்வோம். காவி என்ற வார்த்தை பாஜகவை மட்டும் குறிப்பிடுவது அல்ல. காவி என்பது அமைதி மற்றும் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் நிறம் மற்றும் சொல்லாகும். பயங்கரவாதத்துக்கு நிறம், மதம் கிடையாது" என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "காவி தீரவாதம்:ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்காவிடில் போராட்டம்: பாஜக"

Unknown சொன்னது…

PJB நடத்தகூடிய நாடகம் (போராட்டம்) இனிமேல் செல்லாது.....மக்கள் தெளிவு பெற்றுள்ளார்கள் .....

கருத்துரையிடுக