14 செப்., 2010

அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு தள்ளுபடி

பெங்களூர்,செப்.14:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை விரைவு நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துள்ளது.

மஃதனிக்கெதிராக முதல் நோக்கு ஆதார(prima-facie)த்தின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாலும், தேசப்பாதுகாப்புத் தொடர்புடைய இவ்வழக்கில் ஜாமீன் அனுமதிக்க இயலாது எனவும் நீதிபதி ஸ்ரீகாந்த் வட்டவடி தெரிவித்தார்.

கடந்த மாதம் 17 ஆம் தேதி கைதுச் செய்யப்பட்ட அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் வழங்கவேண்டுமெனக் கோரி வழக்கறிஞர் பி.உஸ்மான் எடுத்துவைத்த வாதங்களை நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை.

விசாரணை பூர்த்தாயாகாததால் வழக்கில் கூறப்பட்ட விளக்கங்களை கவனத்தில் கொண்டு ஜாமீன் அனுமதிக்க இயலாது என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அரசுத்தரப்பு மஃதனிக்கெதிராக எழுப்பிய முக்கிய குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தது.

சாட்சிகளின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள், கேரள போலீஸின் மஃதனியின் டூர் டயரி, உடல்நல பிரச்சனைகள், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நபரையும், மஃதனியையும் இணைத்து ஆஜராக்கிய தொலைபேசி அழைப்புகளின் விவரங்களின் குழப்பம் ஆகிய விஷயங்களை வாதங்களாக எடுத்துவைத்தார் வழக்கறிஞர் உஸ்மான். ஆனால், ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்ற உத்தரவில் அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டுள்ள விமர்சனங்களே அடங்கியுள்ளன.

முதல் குற்றவாளியாக கருதப்படும் தடியன்ற விட நஸீருடனான மஃதனியின் தொலைபேசி அழைப்புகளின் விபரங்கள் இவ்வழக்கின் முதல்நோக்கு ஆதாரம் என நீதிமன்றம் கூறியது.

முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நஸீரும் மஃதனியும் தொலைபேசியில் உரையாடியது பெங்களூர் குண்டுவெடிப்புத் தொடர்பாக அல்ல என்ற மஃதனியின் வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி இது விசாரணையில் தெரியவரவேண்டும் எனக்கூறினார்.

லகாரி எஸ்டேட்டில் நடந்த ரகசிய ஆலோசனையில் மஃதனி பங்கெடுக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக கேரள போலீஸின் டயரியை சமர்ப்பித்த பொழுது இது மஃதனி அளித்ததாக இருக்கலாம் என்றுக்கூறி இந்த வாதத்தையும் தள்ளுபடிச் செய்துள்ளார் நீதிபதி.

மஃதனி ஊனமுற்றவர் மற்றும் உடல்நலன் பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய பொழுது, மஃதனிக்கு உடல்நல பிரச்சனை ஒன்றுமில்லை என்ற மெடிக்கல் சர்ட்டிஃபிக்கேட்டை காரணம் காட்டி அதனையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார் நீதிபதி.

கடந்த இரண்டு வாரங்களாக பரப்பன அக்ரஹா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அப்துல்நாஸர் மஃதனி.

பெங்களூர் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய மேலும் எட்டு வழக்குகளில் மஃதனியை குற்றவாளியாக சேர்த்துள்ளது செண்டரல் க்ரைம் ப்ராஞ்ச்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு தள்ளுபடி"

கருத்துரையிடுக