
கடுமையான சித்திரவதைகளை அனுபவித்த பலர் கஸ்டடியில் மரணமடைந்துள்ளனர். 30 ஆயிரம் பேர் ஈராக்கின் பல்வேறு சிறைகளில் வாடுகின்றனர்.
அமெரிக்கா, தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு கடந்த மாதம் ஏராளமான கைதிகளை ஈராக் போலீசிடம் ஒப்படைத்தது. நிரபராதிகள் சிறையில் வாடுவதற்கு பொறுப்பு ஈராக் பாதுகாப்புத்துறைக்கு என்றும், அவர்கள் நினைத்தால் கைதிகளை தண்டனை அளிக்காமல் விடுவிக்க இயலும் எனவும் ஆம்னஸ்டி கூறியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தினரின் சிறைக்கைதிகளுடனான அணுகுமுறையை குற்றஞ்சாட்டும் ஆம்னஸ்டியின் அறிக்கையில், சட்டவிரோதமாக கைதுச் செய்யப்பட்டிருந்தவர்களையும் அமெரிக்கா ஈராக் ராணுவத்தினரிடம் ஒப்படைத்ததாக உறுதிச்செய்கிறது.
இத்தகையவர்களின் மனித உரிமை மீறப்படுகிறது என மேற்காசியா மற்றும் வடக்கு ஆப்ரிக்காவிற்கான ஆம்னஸ்டி இயக்குநர் மால்கம் ஸ்மார்ட் தெரிவிக்கிறார்.
குற்றங்களை ஒப்புக்கொள்வதற்காக சிறைக்கைதிகள் கொடூரமாக தாக்கப்படுகின்றனர். சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட கைதிகள், கஸ்டடியில் மரணமடைந்தவர்களின் வழக்குகள் எண்ணிட்ட 59 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை நேற்று ஆம்னஸ்டி வெளியிட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கைதுச் செய்யப்பட்ட ரியாஸ் அஹ்மத் ஸலாஹ், கடுமையாக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதால் அவருடைய ஈரல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இரத்தம் அதிகம் வெளியேறியதால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் இறந்து போனதாக அறிக்கை கூறுகிறது.
இயற்கைக்கு மாற்றமான நிர்பந்தித்த உடல் உறவு, எலக்ட்ரிக் ஷாக், கம்பிவடங்களால் அடித்தும் சித்திரவதைச் செய்துள்ளதாக ஆம்னஸ்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாக்தாத் சிறையில் வாடும் இளைஞர்களை இயற்கைக்கு முரணான நிர்பந்த உடல் உறவு மூலம் சித்திரவதைச் செய்ததை கடந்த ஏப்ரலில் ஹியூமன்ரைட்ஸ் வாட்ச் என்ற அமைப்பு வெளிப்படுத்தியிருந்தது. இவ்விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைத் தேவை என ஈராக் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரியிருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈராக் சிறையில் விசாரணையில்லாமல் துன்புறும் ஆயிரக்கணகான கைதிகள்"
கருத்துரையிடுக