14 செப்., 2010

சிரியா மீதான தனது குற்றச்சாட்டுகள் தவறானவை - லெபனான் பிரதமர்

பெய்ரூட்,செப்.14:லெபனான் முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ரபிக் ஹரிரியின் படுகொலை தொடர்பில் தான் சிரியாவைத் தவறாகக் குற்றஞ்சாட்டி விட்டதாக லெபனான் பிரதமர் சாட் ஹரிரி தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைக் கூறியுள்ள ஹரிரி சிரியாவும் லெபனானும் மிக ஆழமான உறவைக் கொண்டிருந்ததாகவும் தனது தந்தையின் படுகொலை குறித்த சர்வதேச விசாரணை பொய்யான சாட்சியங்களின் அடிப்படையில் வழிநடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

2005ல் பெய்ரூட்டில் இடம்பெற்ற ட்ரக் குண்டுத் தாக்குதலில் ரபிக் ஹரிரி பலியானார்.

இந்நிலையில் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில்;
"பிரதமரின் படுகொலை தொடர்பில் சிரியாவைக் குற்றஞ்சாட்டியதில் நாம் தவறிழைத்துள்ளோம். இதுவொரு அரசியல் குற்றச்சாட்டு. இவ்வாறான அரசியல் குற்றச்சாட்டு தற்போது முடிவுக்கு வந்து விட்டது" என ஹரிரி தெரிவித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டை சிரியா தொடர்ந்து மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது தந்தையின் படுகொலைக்கு தொடர்ச்சியாக சிரியாவைக் குற்றஞ்சாட்டி வந்த சாட் ஹரிரியின் நிலைப்பாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை இக்கருத்து பிரதிபலிப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 30 வருடங்களாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வந்த சிரியா ஆயிரக்கணக்கான துருப்புகளையும் அங்கு நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தது.

ஆனால் ரபிக் ஹரிரியின் படுகொலையைத் தொடர்ந்து லெபனானில் சிரியாவுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சிரியா அங்கிருந்து படைகளை வாபஸ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சிரியா மீதான தனது குற்றச்சாட்டுகள் தவறானவை - லெபனான் பிரதமர்"

கருத்துரையிடுக