13 செப்., 2010

புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு: மீண்டும் தவறுச் செய்யும் ஏ.டி.எஸ்

புனே,செப்.13:ஆரம்பக்கட்ட விசாரணையில் புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு நபர்களை கைதுச் செய்திருப்பதாக மும்பை ஏ.டி.எஸ்ஸின் தலைவர் ராகேஷ் மரியா அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மும்பை ஏ.டி.எஸ்ஸுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை மஹாராஷ்ட்ரா முதல்வர் அசோக் அறிவிக்க, மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் புனே குண்டுவெடிப்பு வழக்கு முடிந்துவிட்டதாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

இதில் சுவாராஸ்யமான விஷயன் என்னவெனில், இதுவரை இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள மிர்சா ஹிமாயத் பேக் மற்றும் ஷேக் லால்பாபா முஹம்மது ஹுசைன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.மேலும் இருவரையும் கூடுதல் விசாரணைக்காக போலீஸ் ரிமாண்டில் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை இவ்வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் துவங்குவதற்கு முன்பே மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதே வழக்கில் அப்துஸ்ஸமது பட்கல் விவகாரத்தில் அவசரப்பட்டது போன்று மஹாராஷ்ட்ரா முதல்வரும், உள்துறை அமைச்சரும் அவசரப்பட்டு தவறிழைத்துள்ளனர்.

ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகள் பெரும்பாலான முறை தவறிழைத்துள்ளன. ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகள் வழக்கில் கோர்ட்டில் குற்றத்தை நிரூபிக்க முடியாது. இதற்கு உதாரணமாக அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மலேகான் மற்றும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பைக் குறிப்பிடலாம்.

பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் அழுத்தத்தால்தான் போலீஸ் மற்றும் ஆட்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனரா? என்பதுக் கேள்விக்குறியாக உள்ளது.

குற்றப் பத்திரிகை தாக்கல்ச் செய்யப்படும் முன்பே ஒருவரை குற்றவாளியாக அறிவிக்க இவர்களுக்கு யார் அதிகாரத்தை வழங்கினார்கள். புலனாய்வு ஏஜன்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எல்லா உரிமைகளும் இருக்கிறது ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படுவரை அவர்களின் மதிப்பை காப்பது கடமையாகும்.

நீதிமன்றம் இத்தகைய பாதுகாப்பு ஏஜன்சிகள் மற்றும் ஆட்சியாளர்களின் அறிவிப்பிற்கு கடும் தடையை விதிக்கவேண்டும். நாட்டில் நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல் வழக்குகளில் அப்பாவி இளைஞர்கள் பலர் சிக்கவைக்கப்பட்டு அவர்களது வாழ்க்கை சீரழிக்கப்பட்டுள்ளது.

நாம் நாகரீகமடைந்த சமூகத்தில் வாழ்கிறோம். ஒரு அப்பாவியின் கண்ணியம் எவ்வகையிலும் பாதிப்பிற்கு ஆளாகாத வகையில் நாம் நடந்துக்கொள்ள வேண்டும். இத்தகைய தவறுகளை எவ்வாறு திருத்துவது என்பதுக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இதன்மூலம் நிரபராதிகளான பல குடும்பங்களின் துயரங்கள் துடைக்கப்படும்.

இங்கு ஹிந்து,முஸ்லிம் என்பதல்ல பிரச்சனை என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற எண்ணம் நம் மனதில் மேலோங்க வேண்டும். இதுதான் ஒரு சமூகத்தின் அடிப்படை அலகாகும்.

twocircles.net இலிருந்து

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு: மீண்டும் தவறுச் செய்யும் ஏ.டி.எஸ்"

கருத்துரையிடுக