13 செப்., 2010

அப்துல் நாஸர் மஃதனிக்கெதிராக மேலும் எட்டு வழக்குகளில் விசாரணை- வி.எஸ்.ஆச்சார்யா

பெங்களூர்,செப்.13:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பித்தலைவர் அப்துல்நாஸர் மஃதனியின் மீது மேலும் எட்டு வழக்குகளில் விசாரணை நடத்தப்படும் என கர்நாடக மாநில பா.ஜ.க அரசின் உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் சில அரசியல் தலைவர்களுடன் மஃதனிக்கு தொடர்பைக் குறித்து விசாரணையில் தகவல் கிடைத்ததாகவும் அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகளில் 9 வழக்குகள் பதிவுச் செய்யபட்டுள்ளன. இதில் மடிவாளா போலீஸ் நிலையத்தில் பதிவுச் செய்யப்பட்டுள்ள வழக்கில்தான் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்து மஃதனி கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மஃதனிக்கு பங்குண்டு என கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி வி.எஸ்.ஆச்சார்யா கூறியது விவாதத்தைக் கிளப்பியிருந்தது.

மஃதனியை விசாரணைச் செய்தபொழுது இதுத்தொடர்பான தகவல்கள் கிடைத்ததாக ஆச்சார்யா தெரிவித்திருந்தார். இவ்வறிவிப்பு மஃதனியின் ஜாமீன் மனு சமர்ப்பிப்பதற்கு இரண்டு தினங்கள் முன்பு வெளியானதாகும். பின்னர், ஸ்டேடிய குண்டுவெடிப்புகளில் மஃதனிக்கு எதிரான ஆதாரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை என டி.ஜி.பி அஜய்குமார் சிங்கும், போலீஸ் கமிஷனர் சங்கர்பித்ரியும் அடுத்த நாள் உறுதிச் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆச்சார்யா தனது கூற்றை வாபஸ் பெற்றார். தற்பொழுது மஃதனியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் வேளையில் ஆச்சார்யாவின் இவ்வறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கிடையே, அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு மீதான விசாரணை பூர்த்தியானதைத் தொடர்ந்து ஐந்தாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீகாந்த் வடவெட்டி இன்று (திங்கள் கிழமை) தீர்ப்புக் கூறுகிறார்.

தனக்கெதிரான குற்றப் பத்திரிகையும், தொடர் நடவடிக்கைகளையும் ரத்துச்செய்ய வேண்டும் எனக்கோரி மஃதனி சமர்ப்பித்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்திருந்தது.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்துல் நாஸர் மஃதனிக்கெதிராக மேலும் எட்டு வழக்குகளில் விசாரணை- வி.எஸ்.ஆச்சார்யா"

கருத்துரையிடுக