13 செப்., 2010

துருக்கியில் விருப்ப வாக்கெடுப்பு

இஸ்தான்புல்,செப்.13:அரசியல் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பொதுமக்களின் கருத்தை அறிவதுத் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை விருப்ப வாக்கெடுப்பு துருக்கியில் நடைபெற்றது.

1980 ம் ஆண்டுகளில் ராணுவ ஆட்சியாளர்கள் உருவாக்கிய அரசியல் சட்டத்தில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவருவதற்காகத்தான் இந்த
விருப்ப வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

ஐரோப்பியன் யூனியனில் சேருவதுத் தொடர்பான நிபந்தனைகளை பேணுவதற்காகத்தான் இது என ரஜப் தய்யிப் உருதுகான் தலைமையிலான துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் கிழக்கு மாகாணங்களில் வாக்கெடுப்பு முதலில் துவங்கியது. ஒரு மணிநேரம் கழித்து மேற்கு மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு பத்து மணி நேரம் நீளும். இரவில் முடிவு அறிவிக்கப்படும். அரசு நீடிப்பை பாதிக்கும் வகையில் அமையும் எனக்கருதப்படும் இந்த விருப்ப வாக்கெடுப்பில் பெரும்பான்மை முடிவுதான் விதியை நிர்ணயிக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

சட்டம் மற்றும் நீதித்துறையில் முற்றிலும் மாற்றத்தை உறுதிச்செய்யும் திருத்தங்களைத்தான் அரசு முன்வைத்துள்ளது.

கூடுதலான ஜனநாயகத்தை உறுதிச் செய்வதற்குத்தான் இந்த திருத்தங்கள் என ஆளும் ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் கட்சியின் வாதம். ஆனால், சட்டம் மற்றும் நீதித்துறையை தங்களது விருப்பத்திற்கு உகந்தவாறு மாற்ற முயலும் ஆளுங்கட்சியின் தந்திரம் என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

1980 ஆம் ஆண்டில் ராணுவப்புரட்சியின் 30-வது நினைவுத் தினத்தில்தான் இந்த விருப்ப வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஐந்துகோடி வாக்காளர்கள் முடிவை தீர்மானிப்பார்கள். ஆனால், 17.6 சதவீத் வாக்காளர்களுக்கு இவ்விஷயத்தில் கொள்கை நிலைப்பாடு இல்லை என கருத்துக்கணிப்பு நடத்திய த கோண்டே இன்ஸ்ட்யூட் தெரிவிக்கிறது. 26 சட்டத்திருத்தங்களை அரசு முன்வைக்கிறது.இதில் பெரும்பாலானவற்றிற்கு ஐரோப்பியன் யூனியனின் ஆதரவு உள்ளது. இதில் இரண்டு திருத்தங்களுக்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துருக்கியில் விருப்ப வாக்கெடுப்பு"

கருத்துரையிடுக