13 செப்., 2010

கிறிஸ்தவ பாதிரிகளின் பாலியல் சித்திரவதையால் 13 பேர்

ப்ரஸ்ஸல்ஸ்,செப்.13:பெல்ஜியம் நாட்டில் கத்தோலிக்க பாதிரியார்களின் காம வெறியாட்டத்தால் 13 பேர் தற்கொலைச் செய்துக்கொண்டதாக விசாரணை கமிஷன் அறிக்கை கூறுகிறது.

இரண்டு வயது சிறுவன் உள்பட 537 சிறுவர்கள் பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கமிஷன் நடத்திய விசாரணையில் மிகக்கொடூரமான சித்திரவதைகள் நடந்தது உறுதியாக தெரியவந்தது என விசாரணைக் கமிஷன் தலைவர் பேராசிரியர் பீட்டர் ஆட்ரியன்ஸன்ஸ் கூறுகிறார்.

இதற்கிடையே, குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ராஜினாமாச் செய்த பெல்ஜிய நாட்டைச் சார்ந்தவரான பிஷப் ரோஜர் தலைமறைவாகிவிட்டார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கிறிஸ்தவ பாதிரிகளின் பாலியல் சித்திரவதையால் 13 பேர்"

கருத்துரையிடுக