13 செப்., 2010

கஷ்மீரில் போராட்டம் தொடர்கிறது: தாக்குதலுக்குள்ளானது அமைச்சரின் இல்லம்

ஸ்ரீநகர்,செப்13:கஷ்மீரில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கஷ்மீர் மாநில அமைச்சர் பீர்ஸாதா முஹம்மது ஸயீதின் குடும்பவீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் நடத்தியவர்களை விரட்ட போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதல் நடக்கும்பொழுது அமைச்சர் வீட்டில்தான் இருந்தார்.

பல்வேறு இடங்களில் நடைபெற்ற பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களுக்கு இடையேயான மோதலில் இரண்டுபேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. சாதாரண காயமடைந்த 12 பேரில் 8 பேர் பாதுகாப்புப் படையினர் ஆவர்.

ஸ்ரீநகரைத் தவிர நேற்று பாரமுல்லா,ஸோப்போர் ஆகிய இடங்களிலும் மோதல் வெடித்தது. இச்சம்பவங்களைத் தொடர்ந்து ஜம்மு-கஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகர் உள்ளிட்ட 5 நகரங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலீஸ்-குடியுரிமை அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. பெருநாள் அன்று துவங்கிய கஷ்மீர் மக்களின் போராட்டத்தில் கூட்டத்தை கலைக்க போலீஸ் லத்திசார்ஜும்,கண்ணீர் புகையும் வீசிய பொழுதும் அவர்கள் கல்வீச்சை தொடர்ந்தனர்.பின்னர் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஸமீர் அஹ்மத் மாலிக்கிற்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இவரை மருத்துவமனையில்
சேர்த்துள்ளனர்.

பாராமுல்லாவில் நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிக் குண்டு துளைத்ததில் 34 வயதான மீர் அஷ்ரஃபிற்கு கடுமையான காயம் ஏற்பட்டது.

கண்டனப் பேரணியில் பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்ததற்காக ஹுர்ரியத் தலைவர் மீர் வாய்ஸ் ஃபாரூக் மீது ஷஹீத் கஞ்ச் போலீசார் வழக்கு பதிவுச் செய்துள்ளனர். இது முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் உத்தரவின் பெயரில் தொடரப்பட்டதாகும். அரசின் நிராசைதான் தனக்கெதிரான
குற்றச்சாட்டும், வழக்கும் என மீர்வாய்ஸ் ஃபாரூக் குறிப்பிட்டார்.

ஸவ்ரா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் துணை சூப்பிரண்டிற்கு போராட்டக்காரர்களின் கல்வீச்சில் காயம் ஏற்பட்டது. கஷ்மீரில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களைத் தொடர்ந்து கூடுதல் சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 11 முதல் துவங்கிய போராட்டங்களில் இதுவரை போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 70 பேர் காயமடைந்துள்ளனர்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீரில் போராட்டம் தொடர்கிறது: தாக்குதலுக்குள்ளானது அமைச்சரின் இல்லம்"

கருத்துரையிடுக