13 செப்., 2010

பன்றிக் காய்ச்சல் இன்றுமுதல் தடுப்பூசி

சென்னை,செப்.13:பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் ஹெச்1என்1 வைரஸைக் கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி மருந்து போடும் முறை சென்னையில் திங்கள்கிழமை (செப்.13) முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் தேவைப்படுவோருக்கு 150 கட்டணத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்து போடப்படும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ் கூறினார்.

ஆரம்ப அறிகுறிகள் என்ன? இருமல்-சளியுடன் வைரஸ் காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி ஆகியவை பன்றிக் காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளாகும். தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் பன்றிக் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். பன்றிக் காய்ச்சலுக்கு மேலே குறிப்பிட்ட ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய உடனேயே சிகிச்சை பெறும் நிலையில் உயிரிழப்பு ஏற்படாது. பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கத்துடன் தடுப்பூசி மருந்து போடும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

50 ஆயிரம் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு: முதல் கட்டமாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 50 ஆயிரம் ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்து போடப்படும். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தப்படும்.

நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோரும் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் என்றார் சுப்புராஜ்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பன்றிக் காய்ச்சல் இன்றுமுதல் தடுப்பூசி"

கருத்துரையிடுக