11 செப்., 2010

திருக்குர்ஆன் பிரதியை எரிக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக பாஸ்டர்

வாஷிங்டன்,செப்.11:புனித திருக்குர்ஆனின் பிரதியை செப்.11 தாக்குதல் நினைவு தினத்தில் எரிக்கப் போவதாக அறிவித்த அமெரிக்காவின் ஃப்ளோரிடா சர்ச்சின் பாஸ்டர் டெர்ரி ஜோண்ஸ் தற்பொழுது அதனை கைவிட்டுவிட்டதாக அறிவித்துள்ளான்.

கிரவுண்ட் ஸீரோவுக்கருகில் மஸ்ஜித் நிர்மாணிக்காமலிருந்தால் தாங்கள் ஒருபோதும் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கமாட்டோம் எனக் கூறிய டெர்ரி ஜோண்ஸ் கிரவுண்ட் ஸீரோவில் இஸ்லாமிய மையம் ஸ்தாபிப்பதற்கு தலைமை வகிக்கும் இமாம் ஃபைஸல் அப்துற்றவூஃபுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக பரவிய செய்தியை மறுத்துள்ளான்.

இஸ்லாமிய மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற ஃப்ளோரிடா இமாம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் நேற்று முன்தினம் டெர்ரி ஜோண்ஸ் கூறியிருந்தான். ஆனால் ஃப்ளோரிடா இமாம் கூறியதுக் குறித்து தங்களுக்கு ஒன்றும் தெரியாது என இஸ்லாமிய மையத்திற்காக பணியாற்றி வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமாதானத்தை லட்சியமாகக் கொண்ட எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என நியூயார்க் இமாம் அப்துற்றவூஃப் உறுதிபடக் கூறியுள்ளார்.

திருக்குர்ஆன் பிரதியை எரிக்கும் திட்டத்திலிருந்து விலகுமாறு எஃப்.பி.ஐ குழுவினர் பாஸ்டரை சந்தித்திருந்தனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் பாஸ்டருடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார்.

பாஸ்டரின் முயற்சி ஆஃப்கானிஸ்தானிலும் இதர இடங்களிலுமுள்ள அமெரிக்க ராணுவத்தினருக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற அறிக்கையைத் தொடர்ந்து ஒபாமா அரசு இதில் நேரடியாக தலையிட்டது. ஆனால் தனது அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டதாக வெளியான செய்தியை ஒபாமா மறுத்துள்ளார்.

அமெரிக்காவில் எல்லா மதப்பிரிவினருக்கும் சம உரிமை உண்டு எனவும் மஸ்ஜித் கட்டுவதை எதிர்க்கவில்லை எனக்கூறிய ஒபாமா, கிரவுண்ட் ஸீரோவுக்கருகில் யூத தேவாலயமும், ஹிந்துக்கோயிலும் கட்டலாமென்றால் மஸ்ஜிதும் கட்டலாம் எனத்தெரிவித்தார்.

"நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரிகளல்ல மாறாக பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள்" என ஒபாமா செப்.11 நினைவுத்தின நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்னர் வெள்ளை மாளிகையில் வைத்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மஸ்ஜித் கட்டுவதை ஆதரித்து நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது.

திருக்குர்ஆன் பிரதியை எரிக்கும் திட்டத்திற்கு எதிராக உலகமுழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

ஆப்கானிஸ்தானில் பதக்‌ஷான் மாகாணத்தில் நடந்த கண்டனப் போராட்டத்தில் நேட்டோ ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், அம்மாகாண போலீஸ் தலைவர் செய்யத் ஸஃபோய் இதனை மறுத்துள்ளார்.

பாஸ்டரின் இச்செயல் பயங்கரவாதம் எனவும், இஸ்லாத்திற்கெதிரான முயற்சி எனவும் மக்கா இமாம் ஷேக் ஸாலிஹ் பின் ஹுமைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, முஸ்லிம் உலகத்திற்கு எதிரான பழிவாங்கும் முயற்சியாக திருக்குர்ஆன் பிரதியை எரிக்கப்போவதாக கன்ஸாஸில் வெஸ்ட்பாரோ பாப்டிஸ்ட் சர்ச்சின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இடமும், தேதியும் அறிவிக்கவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "திருக்குர்ஆன் பிரதியை எரிக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக பாஸ்டர்"

கருத்துரையிடுக