27 செப்., 2010

கஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

ஸ்ரீநகர்,செப்.27:மோதல் தணிந்த சூழலில் கஷ்மீரின் பெரும்பான்மையான இடங்களில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

அனந்த்நாக், புல்வாமா, குல்காம், ஷோபியான், அவந்துபுரா, ஹந்த்வாரா ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பூரணமாக விலக்கப்பட்டது.

ஸ்ரீநகரில் கடந்த சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்ட போதிலும் ஹப்பாகல்தாவிலும், ஸொலினாவிலும் ராணுவத்தினர் மீது கல்வீச்சு நடைபெற்றதால் நேற்று மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஸோபோரில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர்குண்டு வீசியதில் ஒருவருக்கு காயமேற்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் இன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பீர்ஜாதா முஹம்மது ஸஈத் தெரிவித்தார். மோதலும் அதனைத் தொடர்ந்த ஊரடங்கு உத்தரவாலும் கஷ்மீரில் கடந்த 3 மாதங்களாக கல்விநிலையங்கள் மூடிக்கிடந்தன. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போதிய போக்குவரத்து வசதிகள் செய்துக் கொடுக்கப்படும் என உயர்மட்டக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் தெரிவித்தார்.

பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்ப அமைச்சர் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்தவேளையில், ஹூர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்பவேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்வியின் முக்கியத்துவத்தை மறுக்க கோருவது அறிவுடையோரால் முடியாத காரியமாகும். ஆனால், நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தில் அரசுக்கு ஆர்வம் உண்டு என்பது பைத்தியக்காரனின் கனவு போன்றதாகும்.

போலீஸ் மற்றும் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களில் மாணவர்களும் அடங்குவர் என கிலானி தெரிவித்தார்.

வீட்டிலேயே இருந்துக்கொள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கிலானி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று முதல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் கிலானி அழைப்புவிடுத்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்"

கருத்துரையிடுக