27 செப்., 2010

கஷ்மீரிகளின் சுதந்திர தாகம் ஆழமானது: சீதாராம் யெச்சூரி

புதுடெல்லி,செப்.27:கஷ்மீரிகளின் சுதந்திரத்திற்கான தாகம் நாம் கருதியதைவிட எவ்வளவோ தூரம் ஆழமானது என சி.பி.எம் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் வைத்துக்கூட அவர்கள் ஆவேசத்தோடு சுதந்திரத்தைக் குறித்து பேசினார்கள் என யெச்சூரி தெரிவித்தார்.

மத்திய அரசு கஷ்மீருக்கு அனுப்பிய அனைத்து பிரதிநிதிக் குழுவில் இடம்பெற்றிருந்த தனது கஷ்மீர் அனுபவங்களைக் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியவற்றிலிருந்து:
"தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானியுடனான சந்திப்பு அவநம்பிக்கையின் பனிமூட்டத்தை நீக்குவதாகயிருந்தது. நாங்கள் அவருடைய வீட்டிற்கு செல்வோம் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை என நினைக்கிறேன். எங்களை வரவேற்றதற்கு அவருக்கு உருதுமொழியில் நன்றி தெரிவித்தேன்.

ஊரடங்கு உத்தரவினால் பால் கிடைக்காததால் தங்களுக்கு தேநீர் தர இயலவில்லை என கிலானி தெரிவித்தார். பரவாயில்லை, பாலில்லாத தேநீரை நாங்கள் அருந்துகிறோம் என நாங்கள் தெரிவித்தோம்.

மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் அஸாஸுத்தீன் உவைஸி, அகாலிதளின் ரத்தன்சிங் அஜ்னாலா, தெலுங்கு தேசம் கட்சியின் நாம நாகேஷ்வரராவ், தி.மு.கவின் டி.ஆர்.பாலு ஆகியோர் எங்கள் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

40 நிமிடங்கள் கிலானி எங்களுடன் உரையாடினார். எங்களிடையேயான உரையாடலை கேமராவில் படம் பிடிக்கவேண்டும் என அவர் கோரினார். தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவும், அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதை கூறவும் கேமராவில் படம் பிடிக்க அவர் கோரியிருப்பார் என நான் கருதுகிறேன்.

எங்களுக்கு அதில் எவ்வித பிரச்சனையுமில்லை. கஷ்மீருக்கு சுதந்திரம் அளிக்கவேண்டும் என அவர் ஆவேசத்தோடு தெரிவித்தார்.

கஷ்மீர் மக்களுடன் போதுமான அளவு அனைத்துக்கட்சி பிரதிநிதிக்குழு பேசவில்லை. ஹோட்டல் பணியாளர்கள், ஹஸ்ரத் பால் மஸ்ஜித், மருத்துவமனை, பண்டிட்டுகளின் அகதி முகாம் ஆகியவற்றில் சந்தித்தவர்களிடமும் அரசியல் தலைவர்களோடும் மட்டும்தான் உரையாட வாய்ப்பு கிடைத்தது.

மத்திய அரசு சரியான சாலை வரைபடம் இன்றி எங்களை கஷ்மீருக்கு அனுப்பியது. ரமலான் மாதத்திற்கு முன்பே அனைத்து கட்சி பிரதிநிதிக்குழு கஷ்மீருக்கு செல்லவேண்டியதாகயிருந்தது." இவ்வாறு யெச்சூரி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீரிகளின் சுதந்திர தாகம் ஆழமானது: சீதாராம் யெச்சூரி"

கருத்துரையிடுக