பெங்களூர்,செப்.23:பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பதன் மீதான தீர்ப்பு நாளை செப்டம்பர் 24 ம் தேதி அலகாபாத் நீதிமன்றம் வெளியிட இருக்கும் நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நேரலாம் என்ற அச்சத்தால் கர்நாடகா அரசு இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.
பாபர் மசூதி நில வழக்கு தீர்ப்பு வெளியாகும் போது நாட்டில் கலவரம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்படும் என்ற அச்சமுள்ள உத்தரபிரதேசம், குஜராத், கர்நாடகா முதலான மாநிலங்களில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24, 25 ஆகிய 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு செய்துள்ளார்.

0 கருத்துகள்: on "கர்நாடகாவில் அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!"
கருத்துரையிடுக