19 செப்., 2010

முத்துப்பேட்டையில் கலவரத்தைத் தூண்ட முயன்ற ஹிந்துமுன்னணி

முத்துப்பேட்டை,செப்.19:திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஒரு இளைஞரால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் போலீஸாரின் சமயோஜிதத்தால், பெரும் கலவரம் மூளாமல் தவிர்க்கப்பட்டு விட்டது.

ஆண்டுதோறும் முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதன் காரணமாக முஸ்லீம் குடியிருப்புகள் வழியாக ஊர்வலம் போக கோர்ட் தடை விதித்தது.

இருப்பினும் ஊர்வலம் இந்தப் பாதைகள் வழியாக செல்வது தொடர் கதையாக நீடிக்கிறது. கடந்த ஆண்டு முதல் மாற்றுப் பாதை வகுக்கப்பட்டு அந்த வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த முறையும் பிரச்சினை வந்து விடாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது.

நேற்று மதியம் மூன்று மணிக்கு ஜாம்பவான் ஓடை கிராமத்தில் உள்ள சிவன் கோயில்களில் இருந்து புறப்பட்டு, சுமார் ஐந்து கிலோமிட்டார் வரை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் இறுதியில் கிழக்குக்கடற்கரை சாலியில் உள்ள பாமணி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

விநாயகர் ஊர்வலம் இஸ்லாமியர் பகுதிக்குள் வந்துகொடிருந்த ஒபோது, வேலூர் எம்.பி. அப்துல்ரகுமான் வீட்டில் கல் எறிய முயற்சித்த ஒரு இளைஞரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் வேனுக்குள் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்.

அந்த இளைஞர் தடுத்து பிடிக்கப்பட்டதால் பிரச்சினை ஏதும் இல்லாமல் போய் விட்டது. இல்லாவிட்டால் பெரும் அமளியாகியிருக்கும். இந்த சிறு சம்பவத்தால் லேசான பதட்டம் ஏற்பட்டு பின்னர் தணிந்தது.

தட்ஸ் தமிழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முத்துப்பேட்டையில் கலவரத்தைத் தூண்ட முயன்ற ஹிந்துமுன்னணி"

கருத்துரையிடுக