மும்பை,செப்.21:மும்பை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கஸாப், அதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் மனு தாக்கல் செய்கிறார்.
மகாராஷ்டிர சட்ட உதவி மையம், கஸாபுக்காக நியமித்துள்ள வழக்கறிஞர் அமின் சோல்கர், மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
மனு தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் மனுவை தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விசாரணை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட கஸாபின் மரண தண்டனையை உறுதிப்படுத்தும் விசாரணை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த நடைமுறை 3 மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மும்பை தாக்குதல் சம்பவ வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பஹிம் அன்சாரி, சாபுதீன் அகமது ஆகியோர் மும்பை விசாரணை நீதிமன்றத்தில் வரும் 23-ம் தேதி ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இருவரின் விடுதலையை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த நீதிபதி, இருவரையும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
2008-ல் ராம்பூரில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருவரும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள வெவ்வேறு சிறைகளில் உள்ளனர்.

0 கருத்துகள்: on "மரண தண்டனையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் கஸாப் விரைவில் மனு"
கருத்துரையிடுக