டமாஸ்கஸ்,செப்.26:ஃபலஸ்தீனில் இரு துருவங்களாக செயல்பட்டுவரும் ஹமாஸ் மற்றும் ஃபத்ஹ் அமைப்புகளுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை சிரியா தலைநகரான டமாஸ்கஸில் நடைபெற்றது.
ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அல் ஃபத்ஹ் பிரதிநிதி அஸ்ஸாம் அல் அஹ்மத் ஆகியோர் டமாஸ்கஸில் அஹ்மதின் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஐக்கிய ஒப்பந்தத்தின் மாதிரி ஆவணம் தயாரித்த பிறகு உடனடியாகவே கூட்டம் நடைபெறும் என்றும், தொடர்ந்து எகிப்து தலைநகரான கெய்ரோவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகவும் இரு பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.
வருடக்கணக்கில் தொடர்ந்துவரும் இரு பிரிவினர்களுக்கிடையேயான பிணக்கு கடந்த 2006 ஆம் ஆண்டில் ஹமாஸுக்கு தேர்தலில் பெரும்பான்மை கிடைத்ததோடு வலுப்பெற்றது.
பின்னர் கடுமையான மோதலுக்கு பிறகு காஸ்ஸாவிலிருந்து ஃபத்ஹை ஹமாஸ் வெளியேற்றியிருந்தது. ஹமாஸ் மற்றும் ஃபத்ஹ் அமைப்பினரிடையே ஐக்கியத்திற்கு முயற்சியை மேற்கொள்வது எகிப்தாகும்.
எகிப்தின் உளவுத்துறை தலைவர் உமர் சுலைமானும், காலித் மிஷ்அலும் இந்த மாத துவக்கத்தில் சவூதி அரேபியாவில் சந்தித்து பேசினர். பின்னர் ஃபத்ஹுடனான பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்யப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஹமாஸும் ஃபத்ஹும் பேச்சுவார்த்தை நடத்தின"
கருத்துரையிடுக