26 செப்., 2010

சோமாலியாவின் கிளர்ச்சி பிரதேசங்களுடனான உறவை வலுப்படுத்துகிறது அமெரிக்கா

வாஷிங்டன்,செப்.26:சோமாலியாவின் கிளர்ச்சி பிரதேசங்களான சோமாலியாலாண்ட், ஃபண்ட்லாண்ட் ஆகியவற்றுடனான உறவை அமெரிக்கா வலுப்படுத்தி வருகிறது.

சோமாலியாவில் இஸ்லாமிய போராளிகளை அடக்கி ஒடுக்குவதுதான் இதன் நோக்கம் என அமெரிக்காவின் ஆப்ரிக்க உதவி செயலாளர் ஜோணி கார்ஸன் கூறுகிறார்.

இரண்டு பிரதேசங்களையும் சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை. சோமாலியா அரசுக்கு எங்கள் ஆதரவு தொடரும். (இதுதான் பூனைக்கு தோழன் பாலுக்கும் காவலன் என்பதோ?) சோமாலியா லாண்ட் மற்றும் ஃபண்ட் லாண்ட் ஆகிய பிரதேசங்களுக்கு கூடுதல் வளர்ச்சித் திட்டங்களுக்காக கூடுதல் உதவி பணியாளர்களையும், தூதரக அதிகாரிகளையும் அனுப்ப தீர்மானித்துள்ளதாக ஜோணி கார்ஸன் தெரிவிக்கிறார்.

ஃபண்ட்லாண்டும், சோமாலியா லாண்டும் 1990 களில் தங்களை சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்திக்கொண்ட பொழுதிலும் சர்வதேச சமூகம் அதனை இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சோமாலியாவின் கிளர்ச்சி பிரதேசங்களுடனான உறவை வலுப்படுத்துகிறது அமெரிக்கா"

கருத்துரையிடுக